மஹிந்த அரசாங்கத்தை போன்று காணப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக   மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்த ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்கவே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கமும் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு வெள்ளை வான்களையும், பாதுகாப்புப் பிரிவினரையும் அனுப்பி அவர்களை அச்சுறுத்துகின்றது. மாணவர்கள் தங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போது அதற்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து அதனை தடுக்க முற்படுகின்றது.

கடந்த அரசாங்கத்தில் இதுபோன்ற அச்சுறுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்றனர். அவர்களும் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகளையே கடைப் பிடிக்கின்றனர். என நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.