யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பிரசேத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளின்றி வறுமைக் கோட்டின்கீழ் வாழ்ந்து வரும் மூன்று குடும்பங்கள், உடுத்துறை, தாளையடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார உதவியாகவும், மீண்டும் இவர்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் முகமாகவும் இவர்களிற்கு மீன்படி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

photo 2

இவ் உதவித்திட்டம் மொட்டன்ஸ்றூட் கல்வி வளாகத்தின் நிர்வாக உறுப்பினர் சிறீ அவர்களின் நிதி அனுசரணையுடன் நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் செயற்ப்படுத்தப்பட்டுள்ளது

photo 3

செயற்திட்டம்: வாழ்வாதார உதவித்திட்டம்
திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமம்: உடுத்துறை
பிரதேச செயலர் பிரிவு: தாளையடி
மாவட்டம்: யாழ்ப்பாணம்
நிதிப் பங்களிப்பு: நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம் ஊடாக
ஒஸ்லோ மொட்டன்ஸ்றூட் கல்வி வளாக நிர்வாக உறுப்பினர் திரு. சிறீ