நோர்வே தமிழ் மகளிர் குமுகம் முறுகண்டி புனித போல் முன்பள்ளிக்கு உதவி April 20, 2015 News நோர்வே தமிழ் மகளிர் குமுகத்திநூடக முன்னெடுக்கபட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் முறுகண்டி பகுதியில் அமைந்துள்ள புனித போல் முன்பள்ளிக்கட்டடத்தின் மறுசீரமைப்புக்கும் சிறார்களுக்கு தேவையான தளபாடங்கள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.76 சிறார்களை உள்ளடக்கிய இப்பள்ளியில் 1-5 வயது வரையுள்ள சிறார்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். சிறார்கள் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவரும் பெரும் மன நிறைவடைவதைத் தெரியப்படுத்தியுள்ளார்கள் இச்சிறார்களின் கல்வி தொடர்பில் பெற்றோரும், ஆசிரியர்களும் கூடிய கவனம் எடுக்க வேண்டும். வளரும் இந்த சிறார்கள் வளமான தாயகத்தை கட்டியெழுப்ப முன்னிப்பர். எமது எதிர் காலம் பயனுள்ள வகையில் நிலைபெறச் செய்ய இச்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு நாமும் கைகொடுப்பதில் மகிழ்வடைகிறோம்.