ifHkKaTjf1Eநோர்வே தமிழ் திரைப்பட விழாவும் – தமிழர் விருது 2015 April 21, 2015 News ஆறாவது ஆண்டு நிறைவு விழாவில் ஐந்து நாட்கள் உங்களோடு !எதிர்வரும் ஏப்ரல் 22 முதல் 26 ஆம் திகதி வரை. 10 திரைப்படங்கள் Symra Kino, Lørenskog Kino வில் திரையிடப்படுகிறது. இது உலகத் தமிழருக்கான மாபெரும் தமிழ்த் திரைப்பட விழா.! சித்திரை 22 ஆம் திகதி முதல் 25 திகதி வரை உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் இரு வேறு திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது. ஆரம்பத்திரைத் திருவிழா 22 ஆம் திகதி சித்திரை மாலை 1800 மணி முதல் ” Rommen Scene” வில் , நமது கலைஞர்களின் நடங்கள், திரையிசைப் பாடல்கள், பிரபலங்களின் நேர்முகம், இவற்றோடு 10 மேற்பட்ட குறும்படங்கள் , காணொளி, ஆவணப் படம் திரையிடல்! இசையோடு கலந்திட சினிமா பாடல்கள், அனுமதி: அனைத்தும் இலவசம் ! 26 ஆம் திகதி சித்திரை மாலை 17.00 மணிக்கு Lørenskog hus மண்டபத்தில். தாய்த் தமிழகத்தில் இருந்து வருகை தரும் 10 மேற்பட்ட பிரபல கலைஞர்கள் உடன் , எமது உலகத் தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் பலர் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தருகிறார்கள். டென்மார்க் புகழ் நடிகர்/இயக்குனர் /பாடகர் “Diluckshan Jeyaratnam “உடன் நிதுஷா பாஸ்கரன் தொகுத்து வழங்கும் பல்சுவை கலைச்சங்கமம். “நள்ளிரவுச் சூரியன்- இன்னிசைக் கொண்டாட்டம்” – தமிழ்முரசம் வானொலியின் செல்லக்குயில் வெற்றியாளர்கள உடன் நமது டென்மார்க் பாடகர் டிலுக்க்ஷன் ஜெயரட்ணம் எங்கள் கலைஞர்கள் இணைத்து இசைமழை பொழிய, தமிழர் விருது -2015″ வழங்கும் விழா. இவர்களுடன், 9C ஒஸ்லோ, உயிர்வரை இனித்தாய் திரைப்படங்களின் நடிகர்கள், நடிகைகள் டென்மார்க்கில் இருந்தும், நமது கலைஞர்களும் உங்களை சந்திக்க வருகிறார்கள். 26.04.2015 அன்று நிறைவு நாள் நிகழ்வுக்கான நுழைவுச்சீட்டு: பெரியவர்கள்: 200 குரோனர்கள் , சிறுவர்கள் : 150 குரோணர்கள் . மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி எண்கள்: 401 68 612/465 54 765/ இணையதள முகவரி: www.ntff.no www.facebook.com/ntff.no