சிறப்பாக நடைபெற்ற அன்னைபூபதி வைத்வெத் வளாகத்தின் பத்தாம் ஆண்டு கலைமாலை April 25, 2015 News 25.04.2015 சனிக்கிழமை மாலை 4மணிக்கு அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் வைத்வெத் வளாகத்தின் பத்தாவது ஆண்டு கலைமாலை மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் பெற்றோர்களின் கூட்டுமுயற்சியால்அன்னைபூபதி வைத்வெத் வளாக மாணவர்களின் மிகச்சிறப்பான கலைவெளிப்பாடுகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. எமது சிறார்கள் தமிழ்மொழியை இழந்து விடக்கூடாது என்ற சீரிய சிந்தனையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் உருவாக்கப்பட்ட அன்னைபூபதி கலைக்கூடத்தில் இருந்து தமிழ்மொழியை கற்று தமிழை அழியாது பாதுகாத்து வருகின்றார்கள் என்பதற்கு இன்றைய நிகழ்வும் சான்றாக பறைசாற்றி நிற்கின்றது என்றால் அது மிகையாகாது அந்தளவிற்கு பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பும் கலைவெளிப்பாடும் தமிழர்களை தலைநிமிர வைத்துள்ளது. இக் கலை மாலையில் மழலையர் பிரிவில் இருந்து எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரைக்கும் நடனம் நாடகம் பாட்டுகளுடன் கலைவெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.