தமிழ் இயக்கத்தின் வரலாற்றை சுருக்கமாக விபரிக்க முடியுமா?. 2009 ஆம் ஆண்டில் இருந்து தமிழீழத்தில் உள்ள தமிழ் இயக்கத்தின் தற்போதை நிலைமை என்ன? இலங்கைத் தமிழர்களின் இறையாண்மையானது ஏகாதிபத்தியவாதிகளால் பறிக்கப்பட்டது.

முதலில் 1619 ஆம் ஆண்டு போர்த்துகேயரால் தமிழர்களின் இறையாண்மை பறிக்கப்பட்டதுடன் பின்னர் டச்சுகாரர்கள் இறுதியாக பிரிட்டிஷார் தமிழர்களின் இறையாண்மையை பறித்தனர்.

கிழக்கு குர்திஷ்தான் தொடர்பிலான ரோஜாவா அறிக்கை குறித்து ஐரோப்பாவில் வாழும் தமிழ் செயற்பாட்டாளர் ஆதித்தன் ஜெயபாலனிடம் ஊடகம் ஒன்று நேர்காணல் நடத்தியுள்ளது.

இந்த நேர்காணலில் தற்போதை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மற்றும் குர்திஷ் விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை ஒப்பிட்டுள்ளார். இலங்கையில் வன்முறைக்கும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் மாற்று நாட்டுக்கு ரோஜாவ மாதிரியிலான நடவடிக்கை குறித்தும் ஆதித்தன் கவனத்தில் கொண்டுள்ளார்.

இறுதியில் அனைத்து தமிழ்ச் செயற்பாட்டளர்கள் மற்றும் குர்திஷ் செயற்பாட்டாளர்களுடனான ஒத்துழைப்பு மற்றும் சகோதரத்துவத்தின் இயலுமை பற்றியும் அவர் ஆராய்ந்துள்ளார்.

அவரின் ஆய்வின் முழுவடிவமும் வருமாறு,

தமிழ் இயக்கத்தின் வரலாற்றைச் சுருக்கமாக விபரிக்க முடியுமா? 2009 ஆம் ஆண்டில் இருந்து தமிழீழத்தில் உள்ள தமிழ் இயக்கத்தின் தற்போதை நிலைமை என்ன?

இலங்கைத் தமிழர்களின் இறையாண்மையானது ஏகாதிபத்தியவாதிகளால் பறிக்கப்பட்டது. முதலில் 1619 ஆம் ஆண்டு போத்துகேயரால் தமிழர்களின் இறையாண்மை பறிக்கப்பட்டதுடன் பின்னர் டச்சுகாரர்கள் இறுதியாக பிரிட்டிஷார் தமிழர்களின் இறையாண்மையை பறித்தனர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் 1833 ஆம் ஆண்டில் செயற்கையாக தீவை ஒற்றை நாடாக மாற்றியதுடன் 1947 ஆம் ஆண்டு அதிகாரத்தை ஆங்கிலம் படித்த சிங்கள பிரபுக்களிடம் ஒப்படைத்தது. அவர்கள் நாட்டை சிங்கள பௌத்த நாடாக மாற்றினர்.

வடக்கு குர்திஷ்தன் மக்களை போன்று ஈழத் தமிழர்கள் 1948 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரை சமஷ்டி முறையிலான சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் கோரி அகிம்சை வழியில் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தனர். அரச அனுசரணையிலும் இரட்டைத் தன்மை கொண்ட ஏகாதிபத்திய யோசனை முறையிலும் தமிழர் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலும் அந்த அகிம்சை போராட்டம் அடக்கி மௌனிக்க செய்யப்பட்டது.

இதனையடுத்து 1970 ஆண்டு ஈழத்து இளைஞர்கள் மூத்த தலைமுறையின் நாடாளுமன்ற அணுகுமுறையிலான நடவடிக்கைகள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வை பெற்று தராது என்று உணர்ந்ததுடன் அது ஆயுத போராட்டத்திற்கு வழிவகுத்தது.

1980களின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு விடுதலைப் போராட்டத்தில் முதன்மை போராட்ட இயக்கமாக மாறியது. குர்திஷ்தான் விடுதலை இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல இணையான ஒற்றுமைகள் உள்ளன. இந்த அமைப்புகள் இரண்டும் தேசியம், ஒற்றுமை, பாலின ஐக்கியம், இறையாண்மை மற்றும் புரட்சிகரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கின.

இந்த அமைப்புக்களைப் பிராந்திய மற்றும் சர்வதேச அதிகார தரப்பினர் குற்றவாளிகள் எனவும் பயங்கரவாதிகள் எனவும் முத்திரை குத்தின. இலங்கை அரசாங்கம் தமிழர் பிரச்சினைக்கு ஆயுதம் மூலம் தீர்வுகாணும் திசைக்கு சென்றமைக்கு இவர்களும் பொறுப்பாளிகள்.

விடுதலைப் புலிகள் 1994 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு சென்றனர். தமிழர்களுக்கு எதிரான இராணுவ செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதால், அந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின.

2002 ஆம் ஆண்டு அமெரிக்க – ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நோர்வேயின் தலையீட்டுடன் கூடிய சமாதானச் செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கின. 2004 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழ் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கொலை செய்யும் இரகசியமான போரை கட்டவிழ்த்து விட்டது.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடுப் பகுதி வரை சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவிகளுடன் இலங்கை அரசாங்கம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் அழிக்கும் இன அழிப்புப் போரை முன்னெடுத்தது.

அன்றில் இருந்து எமது ஈழத் தமிழ் மக்களின் அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருதுடன் முன் ஒருபோதும் இல்லாத வகையில் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்து, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஈழத்தில் பல பிரதேசங்களில் மூன்று பொது மக்களுக்கு ஒரு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக கடற்படையும் விமானப்படை, பொலிஸார், பிரிட்டிஷ் பயிற்சி வழங்கிய விசேட அதிரடிப்படையில், மற்றும் பல துணைக்குழுக்களும் செயற்பட்டு வருகின்றன.

இலங்கையின் மொத்த ஆயுதப் படைகளில் 75 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இது தாயகத்தில் மீதமுள்ள தையரிமான குரல்களையும் தமிழ் அரசியல்க்கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்துவோரையும் கடும் கண்காணிப்புக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளது.

கோரிக்கைகள் எதுவாக இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள், அவர்கள் இழந்த சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மையை நோக்கி மீண்டும் கேந்திரப்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைமைகள், கோரிக்கைகள், புலம்பெயர் தமிழர்கள் தலைமையிலும் இந்தியாவின் தமிழ் நாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் ஒரு தெளிவான நிறைவான பங்கை பெற்றுக்கொடுக்க வழிவகுத்துள்ளது.

தமிழீழம் சம்பந்தப்பட்ட நிலைமைகள், தமிழகத்திலும் இந்தியாவிலும் மிக விரிவாக சம்பந்தப்படுகிறதா? புலத்தில் இது எப்படி உள்ளது?

குர்திஷ் மக்கள் எப்படி நான்கு பிராந்தியங்களில் தம்மை அடையாளப்படுத்தி கொள்கின்றனரோ அதேபோல், இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஈழத்தில் உள்ள தமிழர்களும் இருவேறு நாடுகளை கொண்டிருந்தாலும் அவர்கள் பொதுவான மொழி கலாசார விழுமியங்களை கொண்டுள்ளவர்களாக தம்மை அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் பலவந்தமாக அடக்குறை, மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதன் வடிவங்கள் பெரிதும் வேறுபடுகின்றன. ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்கு கோட்பாடு ரீதியான அழிவுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதுடன் தமிழ் நாட்டுத் தமிழர்கள், புதுடெல்வி மற்றும் மும்பாய் ஆகியவற்றின் இந்தி ஆதிக்கவாத கலாசாரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமல்ல, இந்தியாவில் தமிழர்களின் மொழி, தேசிய உரிமைகள் என்பன தொடர்ந்தும் வரையறைகள் மற்றும் பலவந்தங்கள் மூலம் கைப்பற்ற முயற்சிக்கப்படுகிறது. ஈழத்தில் இன அழிப்பு கொள்கை காரணமாக தமிழர்களின் ஒருமைப்பாடு, தேசியம் மற்றும் மொழி உரிமைகள் என அனைத்தும் அரச வன்முறைக்குள் சிக்கியுள்ளது.

ஈழத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வரும் இன அழிப்பானது தமிழகத்தில் சிவில் எதிர்ப்புப் போராட்டங்களை அதிகரிக்க செய்துள்ளது. இந்த சிவில் போராட்டங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக அரசியல் மற்றும் சட்ட ரீதியான நீதியை கோரியுள்ளன.

2009 ஆம் ஆண்டு முதல் தமிழகத் தமிழர்கள் தமது ஜனநாயக விருப்பத்திற்கு அமைய செயற்பாடுமாறு இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஈழத்தில் நிகழ்ந்த இன அழிப்புக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என இந்தியத் தமிழ் மக்களும் தொழிற்சங்கங்களும் இந்திய அரசாங்கத்திடம் வலியுறுத்திய போதும் இந்திய மத்திய அரசு அதனை கவனத்தில் எடுக்கவில்லை. இது தமிழகத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையில்லை என்பதை வெளிக்காட்டியது.

விடுதலைப் போராட்டம் காரணமாக உருவாகிய புலம்பெயர் குர்திஷ் மக்களைப் போன்று, 1980 ஆண்டுகளில் ஈழத்து புலம்பெயர் தமிழர்கள், பிரதானமாக இலங்கை அரசின் போர் கொள்கைகள் மூலம் உருவாக்கப்பட்ட அகதி சமூகமாகும்.

அதேபோல் இன்றைய புலம்பெயர் சமூகம் மீண்டும் அவர்களின் தாயகத்தை வென்றெடுக்கவும் தமது மக்களின் அரசியல் மற்றும் சட்ட உரிமைகளை நிறைவேற்ற கோரியும் செயற்பாட்டு ரீதியான முனைப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கைகள் முக்கிய தளமாக இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்களின் சட்ட ரீதியான உரிமைகள், நாடு என்பன முதன்மையான கேள்வியாக உள்ளது.

உள்ளக மற்றும் வெளியக சுயநிர்ணயம் தொடர்பில் புலம்பெயர்ந்தோரிடம் சில வேறுபாடுகள் உள்ளன. பாசிசவாதிகளின் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பில் தமிழர்களுக்கான இருப்பு இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என ஆதித்தன் ஜெயபாலன் கூறியுள்ளார்.