மே1 இல் அகவை பேதமின்றி அணிதிரள்வோம் April 25, 2015 News, TCC தமிழீழத்தில் தமிழ்மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி பின்பு இன ஒழிப்புக்கு உள்ளாகி நிற்கும் தமிழ் இனத்தை காப்பாற்றி மற்றய இனங்களைப்போல் நின்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்ற மாவீரரின் இலட்சியக்கனவை வெல்லவேண்டும் எனும் தணியாத தாகத்துடன் தமிழர்களின் போராட்டங்கள் சர்வதேசத்தின் அங்கீகாரத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றது இன்றைய காலகட்டத்தில் சிறீலங்கா தமிழ்மக்கள் மீது நிகழ்தி முடித்த இன அழிப்பையும் நிகழ்த்துகின்ற இன அழிப்பையும் சர்வதேசம் நன்கு புரிந்திருக்கின்றது ஆனால் சர்வதேசங்களின் சுயஅரசியலுக்குள் நாம் சிக்குண்டு தவிக்கின்றோம் என்பது மறுக்கமுடியாத உண்மை இந்த உண்மையை சரியாக புரிந்து கொண்டு சனநாயகவெளியில் அரசியல் சாணக்கியத்தோடு முன்னெடுக்கப்படும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மேதினநாளில் முன்னேடுக்கப்படும் போராட்டமானது அரசியல் நகர்வுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதில் எந்த ஜயமும் இல்லை என்பதர்க்கு மக்கள் புரட்சி சாட்சியாகின்றது.