சிறிலங்கா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்த சட்டத்தில் இனப்பிரச்சனை தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் தமிழ் சிங்கள இனப்பிரச்சனையை உள்நாட்டில் தீர்க்க முடியாது எனவும் சர்வதேச மத்திஸ்தம் ஊடாகவே தீர்க்க முடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள இனப்பிரச்சனையில் சர்வதேச சமூகத்தினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் வழிகாட்டல்கள் அனுசரணை வழங்கல், மத்தியஸ்தம், உறுதியளிப்பு, மற்றும்-தீவிர பங்களிப்பு இல்லாமலும் நிரந்தரமானதுமானம் சமத்துவமானதுமான தீர்வொன்றினை காணமுடியாது என இச்சபை உறுதியாக நம்புகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சர்வதேச சமூகமும் இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காண்பதை நோக்கி தமது தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வரவேண்டுமென இச்சபை அழைப்பு விடுக்கின்றது.

இலங்கையில் உள்ள தமிழ் சிங்கள இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காண்பதை நோக்கியதாக இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திற்கு குறிப்பாக ஐரோப்பிய யூனியன், இந்திய, அமெரிக்க, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுக்கு இச்சபை அழைப்பு விடுகின்றது. என இன்று நடைபெற்ற மாகாண சபையின் அமர்வில் முன் மொழிந்தார்.

இதன் பின்னர் சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அல்லது தலையீட்டினால் தான் இலங்கை இனப்பிரச்சனை தீர்க்கப்பட முடியும் என தான் உறுதியாக நம்புவதாகவும் எனினும் தற்போது குரித்தா பிரேரணையை நிறைவேற்றுவது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஐ.நாவின் செப்டெம்பர் மாத அறிக்கை வெளியாகிய பின்னர் நிறைவேற்றுவதன் மூலம் பிரேரணையின் அனைத்து பயனையும் பெற முடியும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பின்னர் அனைவரது வேண்டுகோளிற்கு இணங்க சிவாஜிலிங்கத்தின் அனுமதியுடன் பிரேரணை அடுத்த அமர்விற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.