தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உடுத்துறை வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் May 1, 2015 News, TCC நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குழுகத்தின் நிதி உதவியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து வறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது. இந்த முறை 25 குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சுயதொழில் முயற்சியை ஊக்குவித்து எமது தேச மக்களை சொந்தக் காலில் தங்கி நிற்கச் செய்யவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கப்பட்டது. ஆடுவளர்ப்பில் ஈடுபட விரும்பியவர்களுக்கு நல்லின ஆடுகளும், தையல் தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு தையல் இயந்திரங்களும், கோழி வளர்ப்பில் நாட்டம் உள்ளவர்களுக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிகளும், கடற்தொழில் செய்ய விரும்பியவர்களுக்கு கடற்தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி உதவிகளை வழங்கி வைத்தனர். செயற்திட்டம்: வாழ்வாதார உதவித்திட்டம் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் கிராமம்: உடுத்துறை பிரதேச செயலர் பிரிவு: தாளையடி மாவட்டம்: யாழ்ப்பாணம் நிதிப் பங்களிப்பு: நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகம்