உழைக்கும் வர்க்கத்துக்காக ஓங்கிக்குரலெழுப்பும் இந்நாளில் உரிமைக்கா தமிழர்களாகிய நாம் குரலெழுப்பி வருகின்றோம் அதேவேளை சிறீலங்காவால் இன அழிப்புக்குள்ளான எமது மக்களுக்கா சர்வதேசவிசாரணையை வலியுறுத்தி வருகின்றோம்.

2008 ஆண்டு தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையில் குறிப்பிட்டதிற்கு ஏற்ப இளயவர்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பது விடுதலையை வென்றெடுக்கும் நம்பிக்கையில் பெரும் பலத்தை சேர்த்துள்ளது

தமிழர்கள் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இன அழிப்பை மூடிமறைக்க சிறீலங்காவும் அதன் முண்டு சக்திகளும் சிறீலங்காவின் அதிகார முகத்தை மாற்றிவிட்டு தமிழர்களை மீண்டும் ஏமாற்றலாம் என்ற அங்கலாப்பில் அகலக்கால் வைத்து அதற்கான ராஜதந்திர அரசியல் போரை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.
இதற்கு சில தமிழர்களும் இணக்க அரசியல் என்ற போர்வையை போர்த்தி மாவீரர்களினதும் மக்களினது கனவுக்கு உலைவைப்பதற்கு கங்கணம் கட்டி நிற்பது எமக்கு வேதனையை தருகிறது
இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்த இளையவர்களின் அரசியல் போராட்டம் ஆறுதல் அளிக்கின்ற அதேவேளை சிறீலங்காவுக்கும் அதன் முண்டு சக்திகளுக்கும் தலையிடியாகவுள்ளது என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்
ஆகவே எமது அரசியல் போராட்டத்தின் ஒரு அங்கமான ஆர்ப்பாட்டங்களில் எமது நியாயமான போராட்டத்தை இந்த உலகம் முற்று முழுதாக ஏற்கும் வரை எமக்கான உரிமைக்குரலை உயர்த்திச்சொல்லுவோம்.

————————————————————————————————————————————————————–

ஸ்தவங்கரில் நடைபெற்ற மேதின எழுச்சி நாள்

unnamed (2) unnamed (3) unnamed unnamed (6)