இனப்படுகொலை முடிந்து 6 வருடங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று திரும்பிப்பார்த்தால், எதை இழந்து கொண்டிருக்கிறோம் என புரிகிறது. நினைவேந்தல் ஒரு நினைவிற்காகவோ, அஞ்சலி செலுத்துவதற்காகவோ அல்ல.. நாம் மறந்து கொண்டிருக்கும் அரசியல் கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் உலகிற்கு நினைவுபடுத்தவே..

இலங்கையில் அவனவன் தேவையை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் இந்தியாவின் 11வருட போராட்டமான CEPA(Comprehensive Economic Partnership Agreement)என்ற வணிக ஒப்பந்தம் கிட்டதட்ட இறுதிவடிவம் பெற்றுவிட்டது.நேற்று இது சம்பந்தமான கூட்டம் இலங்கையில் நடந்திருக்கிறது அதில் இலங்கை அமைச்சர் இந்த ஓப்பந்தம் இலங்கைக்கு மிக அவசியமென்று பேசியிருக்கிறார்.எனவே இன்னும் சில மாதங்களுக்குள் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்பலாம்.

அமெரிக்காவை பொறுத்தவரை இலங்கையில் இரண்டு விசயங்களை அது சாத்தித்திருக்கிறது. ஒன்று இந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வருவதை தடுக்கும் பொருட்டு தாய்லாந்து,பர்மா, மாலத்தீவுக்கு அடுத்து இலங்கையையும் தனது கட்டுக்குள் அங்கு நடந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் கொண்டு வந்திருக்கிறது. மற்றொன்று எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சூழல் வராமல் தடுக்கும் பொருட்டு இப்போதே பெருமளவிற்கான முதலீடுகளை இலங்கையில் செய்ய ஆரம்பித்து விட்டது.இதனை சமீபத்திய அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி பேசிய பேச்சை வைத்தே புரிந்துகொள்ளலாம்.

இப்படி ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொன்றும் தங்களது நலன்களை முன்னிறுத்தி இலங்கை பார்க்கிறது.இதில் தமிழர்களுக்கு 2009ல் நடந்த இனப்படுகொலை பற்றி தவறியும் யாரும் பேச மறுக்கிறார்கள் என்பதனை தாண்டியும் அதனை மறைக்க அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

தமிழீழ மக்களை நான்கு புறமும் சூழ்ந்துகொண்டு தாக்கி கோரிக்கையை கைவிடுங்கள் என்று சொன்ன போதும் தங்களின் உயிரை கொடுத்து கோரிக்கையை காப்பாற்றிய போராளிகளுக்கு நாம் என்ன செய்ய போகிறோம்.அவர்கள் காப்பாற்றிய அந்த கோரிக்கையை உயர்த்து பிடிப்பதே அவர்களுக்கு செய்யும் உதவி அது நம் கடமையும் கூட.

 

மே 17 இயக்கம்