வடகிழக்கு பகுதிகளில் தமிழ்மக்களின் நிலங்கள் சிறீலங்கா பேரினவாதிகளால் திட்டமிட்டு கொள்ளை அடிக்கப்படுகின்றது இந்த நிலமை நிறுத்தப்படுவதோடு கொள்ளை அடிக்கப்பட்ட நிலங்கள் தமிழ்மக்களிடம் திருப்பிக்கொடுக்கப்படவேண்டும் குறிப்பாக இராணுவத்திரனால் அபகரிக்கப்பட்ட காணிகள் இன்னும் திருப்பிக்கொடுக்கப்படாத நிலமைதான் இருக்கிறது இது அடிப்படை மனித உரிமை மீறல் எனவே சட்டரீதியாக மீள்கையளிப்பு செய்யப்படல்வேண்டும்.

நாம் எமது காணிகளை மீட்பதற்காக போராடுகிறோம் ஆனால் எத்தனை காணிகள் பேரினவாதிகளால் திருடப்பட்டுள்ளது என்பதற்கு சரியான புள்ளிவிபரம் இன்னும் எடுக்கப்படவில்லை இது வேதனையான விடயம் இப்படியான வேலைகளை செய்வதற்குத்தான் அரசியல்வாதிகளை தெரிவு செய்கின்றோம் ஆனால் காத்திரமான பணிகளிளை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள்