கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் மீண்டும் பதவி ஏற்கவுள்ளார்.

அவர்களுக்கு இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் சார்பில் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம். ஈழத்தமிழர்களுக்காக தமிழக சட்ட மன்றத்தில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்றென்றும் நினைவுக் கூற தக்கவை.

அம்மா அவர்களின் விடுதலை குறித்து தமிழீழத்திலும், உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் அடிமை வாழ்வின் துயரங்களுக்கு இடையிலும் பெரு மகிழ்ச்சியடைகிறார்கள்.

தாங்கள் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்து மேன்மேலும் சிறப்பான பல பணிகளை ஆற்றவேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.