முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவு கூரப்பட்டது! May 12, 2015 News முள்ளிவாய்க்கால் கரையோரத்தில் கப்பலடிப் பகுதியில் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவு கூரப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ரவிகரன், பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் மேரிகமலா குணசீலன், வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் கோ.கருணானந்தராசா, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொ.சிவஞானசுந்தரம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு இரு பொதுச் சுடர்களை ஏற்றி நினைவுரைகளை ஆற்றி எழுச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.