யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவு கூரப்பட்டது! May 12, 2015 News யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் மாணவர்களால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை கேள்வியற்ற இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் பல்கலைகழகத்தினை சூழ்ந்துள்ளனர். அத்துடன் சில புலனாய்வாளர்களும் பல்கலைகழக வளாகத்தினுள் ஊடுருவி நடமாடி திரிவதனால், மாணவர்கள் மத்தியில் பதட்டமான நிலை காணப்படுவதாக பல்கலைகழகத்தினுள் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி;பதிவு