நோர்வே நாட்டின் தொய்யன் கல்வி நிலையத்தின் நிதியுதவி மூலம் சிகை அலங்கார உபகரணங்கள் வழங்கப்பட்டன. May 13, 2015 News அம்பாறை மாவட்டத்தில் சிகை அலங்காரத் தொழிலாளர்களின் தொழிலை மேம்படுத்தும் திட்டத்திற்காக நோர்வே நாட்டின் தொய்யன் கல்வி நிலையத்தின் நிதியுதவி மூலம் சிகை அலங்கார உபகரணங்கள் 10.05.2015 வழங்கப்பட்டன. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் செல்லையா இராசையா தலைமையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மகாசக்தி கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த தொழிலாளர்களில் முதல் கட்டமாக 50 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டடுவரும் நிலையில், மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண்களை தலைமையகமாகக் கொண்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, நோர்வே நாட்டில் உள்ள அஸ்கார் மற்றும் பாறும் உதவி நிதிய மையம் மற்றும் தொய்யன் கல்வி நிலையம் போன்ற அமைப்புக்களின் நிதியுதவியுடன் பல்வேறு உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரகுமார், திருகோணமலை அமைப்பாளர் இராசக்கோன் ஹரிகரன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்;டமை குறிப்பிடத்தக்கது.