இந்தக் கடல் நமது கடல். அது தமிழர் பெருங்கடல். தமிழர் கடலை நாம் ஒருபோதும் இனஅழிப்பு சக்திகளுக்கு விட்டுத்தர முடியாது.
ஈழத்தில் நடைபெற்றதும், நடைபெறுவதும் இனப்படுகொலை.
தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை தமிழீழ விடுதலை.
மே17 ம் தேதி மாலை 4 மணியளவில் தமிழர் கடலான மெரீனா கடற்கரையின் கண்ணகி சிலை அருகே லட்சம் தமிழராய் ஒன்று கூடுவோம்.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறவோம். எந்தக் கடலில் தமிழர்கள் கொல்லப்பட்டார்களோ, எந்தக் கடலில் தமிழர்களின் ஓலம் கலந்துள்ளதோ, அந்த தமிழர் கடலின் ஓரம் கூடுவோம்.
கொல்லப்பட்ட நம் போராளி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். தமிழீழ விடுதலையை உயர்த்திப் பிடிப்போம்.
அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.
-மே பதினேழு இயக்கம்.(9884072010)