மே 18 தமிழின அழிப்பு நாள் தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் விடுக்கும் அறிவித்தல்! May 14, 2015 News, TCC மே 18 தமிழின அழிப்பு நாளும், முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் நிகழ்ந்தேறிய ஆறாவது வருட நினைவேந்தலும் அன்பான நோர்வே வாழ் தமிழீழ மக்களே, முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம் நிகழ்ந்தேறி இன்றோடு ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன. சிறீலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டு, சர்வதேச நாடுகளின் அனுசரணையுடன் தமிழர்களின் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இப்படுகொலைகள், இந்த நூற்றாண்டின் மிகவும் கொடிய இன அழிப்பு நிகழ்வாகும். கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழினத்தை எதேச்சை அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்த பேரவலமானது உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஓர் ஆறாத வடு. கொத்துக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் மற்றும் பல்குழல் பீரங்கி என தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு இலங்கை அரசு நடாத்திய தமிழினப்படுகொலைகளின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் தனது நெஞ்சினில் சுமந்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது ஒரு ஆரம்பம்! தமிழின அழிப்பு நாள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் மாலை ஆறு மணிக்கு ஒஸ்லோ தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமாகின்றது. பின்னர் நோர்வே பாராளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்று அங்கு சில கவனஈர்ப்பு நிகழ்வுகளுடன் இந்த நாள் நிறைவிற்கு வரும். இதை விட மாலை நான்கு மணி தொடக்கம் ஆறு மணி வரை இளையோர் அமைப்பினரால் நோர்வேஜிய மக்களிற்கு ஈழத்தமிழர்களின் இன அழிப்பு சம்பந்தமான துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்படும் தமிழ் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக வந்து இக் கவனஈரப்பு நிகழ்வில் கலந்த கொள்ளுமாறு வேண்டுகிறோம். ஒழுங்கமைப்பு: NCET & TCC