யாழ்ப்பாணம் புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா மிக மோசமான முறையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு நாம் அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம்.எமது சமுதாயத்தில் எதிர்காலத்தில் நல்வாழ்வு வாழக்கூடிய ஒரு மாணவியின் எதிர்காலம் திட்டமிட்டு இரக்கமற்ற மிருகத்தனம் உள்ளவர்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாணவ சமுதாயம் குறித்து எம் மத்தியிலும் குறிப்பாக மாணவிகள், பெற்றார்கள் மத்தியிலும் அச்சத்தையும் உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாயகமண்ணில் பெண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் இல்லை என்பதை தோற்றுகிறது. போர் நடந்த காலத்தில் இருந்து இன்றுவரை பெண்களுக்கு திட்டமிட்டு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. இது இலங்கை இராணுவத்தின் திட்டமிட்ட இன அழிப்பு.பாடசாலை மாணவி பாலியல்வன்புணர்வுக்கு உள்ளக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை நோர்வேதமிழ் மகளீரமைபினராகிய நாம் கடுமையாக கண்டிப்பதோடு கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மாணவியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி உலகநாடுகளில் செயல்படும் சர்வதேசதின் பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளின் கவனத்துக்கும் எடுத்துச்செல்வோம்.