2008 ஆம் ஆண்டு தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டது போன்று இன்று இளைஞர்கள் தங்களின் கல்வி மொழி ஆற்றலால் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு சனநாயகவழி போர்தொடுத்துள்ளார்கள்.
அந்தவகையில் நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு 2009 இற்கு பிற்பாடு சோர்ந்து விடாது தமிழ் இனத்தின் வீடுதலைக்காக தங்களின் பணியை செய்துவருகின்றார்கள் இவர்களின் பணிக்கு மேலும் பலம் ஊட்டுவதற்கு நோர்வே வாழ் இளையோர்கள் அதிகமாக இணைந்து எமது இனத்திற்கு நீதி வேண்டி உலகின் மனச்சாட்சிக் கதவை தட்டித்திறக்க முன்வரவேண்டும் என்பதே இளையோர் அமைப்பின் கோரிக்கையாகவுள்ளது. இதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்து அவர்களை வழிநடத்தவேண்டும் என்பது காலத்தின் தேவையாகவுள்ளது என்பதை மறவாத மக்களாக நாம் மாறவேண்டும்.