தமிழ்ப் பகுதிகளில் இளைய சமூகம் திட்டமிட்டவகையில் சீரளிக்கப்படுவது கடும்வேதனைக்கு உரியது – சஜீவன் May 22, 2015 News 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் இளைய சமூகம் பாரிய பின்னடைவுகளை எதிர்நோக்கியிருப்பது ஒரு துர்ப்பாக்கியமான நிலமை இது இலங்கையில் தமிழ்பகுதிகளில் திட்டமிட்டவகையில் சீரளிக்கப்படுவது கடும்வேதனைக்கு உரியது. சிறிலங்கா அரசாங்கம் எத்தனை கடுமையான பிரயத்தனங்களின் மத்தியில் இந்த திட்டமிட்ட சீரளிவை செய்கின்றது என்பதை சமூகம் உணர்ந்தும் தட்டிக்கழித்து அதற்குள் ஆட்பட்டுப்போவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கற்பழிப்பக்களும் கொலைகளும் கொள்ளைகளும் பெருகிப்போவற்கும் இளைய சமூகம் இனி ஒரு விதி செய்யப்புறப்படாமல் இரப்பதற்க்கும் இந்த திட்டமிட்ட செயல் வளிவகுக்கும். இலங்கை அரசாங்கம் தனது உள்நோக்கத்தை வெளிப்படுத்தாமல் வெறும் மாயையினைஏற்ப்படுத்தி தமிழ் மக்களின் இன உணர்வுகளை சீரளிப்பதற்க்காக இந்த திட்டமிட்ட போதைப்பொருள் வியாபாரத்தை ஆரம்பித்திருக்கிறது. போதைப்பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்வதை விடுத்து இப்போது பரவலாக வெளிப்படையாக விற்பனை செய்யும் அளவுக்க நிலமையினை ஏற்புடுத்தியுள்ளது. இதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டியும் அதனை அசட்டைசெய்யும் அரசு இதற்க்காக நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் ? எதற்க்காக இதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்க்கு அரசு பின்னிக்கிறது. திட்டமிட்டசெயல் என்பதாலா இந்த செயற்ப்பாட்டிற்கு அரசு எந்தவித நடவடிக்கையம் இன்றி இருக்கிறது என்றால் அதற்க்கான காரணம் என்ன ? அண்மையில் நடந்த வித்தியா படுகொலையடன் தொடர்பு பட்டவர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாகவுள்ளனர். இவர்களுக்கு போதைப்பொருட்களை வழங்கியவர்களை உடனடியாக கைது செய்யும்போது இந்த போதைப்பொருட்களை கட்டாயத்தின்பேரில் பரப்புபவர்களை கைது செய்து கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கமுடியும் . இந்த திட்டமிட்ட போதைப்பொருள் விற்பனையினை கடுமையாக எதிர்ப்பதோடு இதற்க்காகவும் சமூக அக்கறை கொண்டவர்கள் வீதியில் இறங்கி கடுமையாக போராடணே;டிய நிலமையை அரசு ஏற்படுத்துகின்றது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் ஊறவிளைகின்றேன். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருட்பாவனையால் காலம் எதிர்பார்க்க முடியாத பல விளைவுகளை யாழ்நகரம் எதிர்கொண்டுள்ளது. பாலியல் பலாத்காரம் கொலை கொள்;ளை குற்றச்செயல்கள் சட்டத்தை மீறும் தன்மை என யாழ்குடாநாடு நாற்றமடிக்கிறது. கந்தபுராண கலாச்சாரம் நிலவிய பூமியென பெயர்பெற்ற யாழ்ப்பாணம் பாலியலும் வன்கொடுமைகளும் மலிந்த நகரமாக மாற்றப்பட்டுவிட்டது. அண்மையில் நடந்த பாலியல் படுகொலைகளின் பின்னணி முழுவதும் போதைப்பொருட்களால் வந்தது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது. இன்றைய பதட்டமான சூழ்நிலைக்கும் கொந்தளிப்பிற்க்கும் போதைப்பொருட்களே முழுமையான காரணம் . வித்தியாவின் கொலையுடன் தொடர்புபட்ட நபர்கள் முதலாவதாக கொடுத்தவாக்குமூலம் போதை போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்குள் யார் அனுமதிக்கிறார்கள். அவற்றை பதட்டம் பயம் இன்றி யார் விற்பனை செய்கிறார்கள் இவற்றை முதலில் கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் சட்டமும் நீதியும் முதல்க்கட்டமாக முன்வரவேண்டும். போதைப்பொருட்கள் வலுக்கட்டாயமாக இளைய சமூகத்திற்குள் திணிக்கப்படுகிறது அதற்கு இளைஞர்களை அடிமையாக்கும் நடவடிக்கை மிக கடுகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை கால ஓட்டத்தில் நாம் உணர்ந்துகொள்வதை விடுத்து இப்பொழுதே அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசும் பொலீசாரும் உடனடியாக முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். போதைப்பொருட்கள் உணவல்ல மனநிலையை மாறுபடச் செய்யும் மருத்துவப்படி தேவையென கருதப்படாதப் பொருட்கள் ஆனால் வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கொள்ளத்தேடும் முயற்சியில் கனவுபாங்கான உணர்ச்சியை அல்லது சுகநலமான அல்லது பெருமிதங்கொண்ட உணர்வை அடையபயன்படுத்துபவை எனவே அந்த போதைப்பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்துவற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும். தட்டமிட்டரீதியில் பரப்பப்படும் இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞ்ஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்பபடுத்தும் துண்டுப்பிரசுரங்களையும் அறிவுறுத்தல்களையும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தவும் அவற்றை திட்டமிட்டு பரப்புவதையும் விற்பனை செய்பவர்களையும் உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு அனைவரும் ஒத்துளைக்கமுன்வரவேண்டும். எஸ். சஜீவன் உப தவிசாளர் வலிவடக்கு பிரதேசசபை