சிறிலங்காவின் சட்டத்திட்டங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை இதனைக் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் பிரதேசங்களை இராணுவத் தளங்களாக மாற்றியுள்ளது. சட்டத்திட்டங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராகவே பிரயோகிக்கப்படுகின்றன.

நீண்டகாலமாக தங்களின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்ற தமிழ் மக்களின் வாழ்வில் இன்னும் ஒளி வீசவில்லை.

எனினும் இந்தியா மற்றும் பிரித்தானியா போன்ற பலமான நாடுகளால் இந்த பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க முடியும்.

எனவே இந்தநாடுகளை இந்த விடயத்தில் மத்தியஸ்த்தம் வகிக்க செய்து, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.