நோர்வேயை பின் தொடர்ந்து ஏமாற்று வித்தையில் தென்னாபிரிக்கா எதிர்கொள்ளுமா தமிழ் தலமைகள் ? June 7, 2015 Translated Feauture தென்னாபிரிக்க வெளிநாட்டமைச்சுடனான சந்திப்பிற்கு ஐக்கியஇராச்சியத்தில் மையம் கொண்டு இயங்கும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) , உலகத் தமிழர் பேரவை என்ற (GTF) பிரமுகர்கள் குழுமமும் குழுவாதத்தில் ஒன்றுடன் ஒன்று மோதியபடி பல கனடா, அமெரிக்க, அவுஸ்ரேலிய மற்றும் ஐரோப்பிய புலம் பெயர் ஈழத்தமிழ் அமைப்புக்களை இழுத்துச்சென்றன. இன்றய புதிய சிறிலங்கா அரசு சர்வதேச மயப்பட்டுள்ள தமிழர் பிரச்சனையை எதிர்கொள்ள இந்த தென்னாபிரிக்க விடயத்தை கச்சிதமாக பாவிக்கின்றது. ஈழத்தமிழ் அமைப்புக்களுடனனா மே-ஜூன் 2015 இச்சந்திப்பு சம்மந்தமான துல்லிய தகவல்களை ஆதாரங்களுடன் அறிந்து வைத்திருக்கும் தமிழ் ஆர்வலர் ஒருவர், தெரிவிக்கையில் இனி விலகிச்செல்லும் பாதையைக்காட்டும் தலமைகளை விடுத்து அடிப்படை தமிழ் அபிலாசைகளை முன்னகர்த்தக்கூடிய காத்திரமான தலமையை தமிழ்மக்கள் உருவாக்க வேண்டிய வரலாற்றுகக்காலம் வந்துள்ளது என தமிழ்நெற்றிற்கு தெரிவித்தார். “இனப்படுகொலையை விசாரிக்க சர்வதேச விசாரணை” என்ற கோரிக்கையில் இருந்து விலகவைக்கும் பொறியில் தமிழ் புலம் பெயர் குழுக்கள் இலகுவாக வீழத்தப்பட்டு முட்டாள்கள் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தமது ஜனனாயக வேணாவை முன்னகர்தத் திறமைமிக்க புதிய ஆர்வலர் அலை ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும் கரிசனைமிக்க ஆர்வலர் மேலும் கருத்து வெளியிட்டார். தமிழ் மக்கள் அழிவிற்கு மூலகாரணமான உண்மைக்குற்றவாளிகளின் நோக்கங்களை அறிந்து, தமிழரை விலகிச்செல்லும்வழிமுறைக்கு தவறாக வழிநடத்தும் BTF, GTF, ICET, TGTE, US-TPAC, CTC, ATC ஆகியோரை இட்டு கவனமாக இருக்கவேண்டும். இக்கட்டுரையின் அநேகமான தகவல்களும், ஒலிநாடக்கள் உட்பட்ட ஆதாரங்களும் இரகிசயத்தன்மை வாய்ந்தவை என்பதால் தமழ் நெற் அவற்றை வெளியிடவில்லை. *** சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ “சமரஸ” திட்டத்திற்கு உதவவென தென்னாபிரிக்காவிற்கு அழைப்புவிடுத்திருந்தார். அழைப்பின் நோக்கம் தமிழர் பிரச்சனையை LLRC போன்ற உள்ளக பொறிமுறைக்குள் சிக்கவைப்பது. இத்திட்டம் ஈழத்தமிழரின் நிறுமான இனப்படுகொலையின் இறுதிவடிவமானது. 23 வது பொதுநலவாய தலைவர்களின் சந்திப்பு நவம்பர் 2013 கொழிம்பில் நடைபெற்றபோது ராஜபக்ஸவின் அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பை ஏற்றுக்கொண்ட தென்னாபிரிக்கா ஜனாதிபதி ஜாக்கப் சூம்பா தனது உதவி ஜனாதிபதி சிறில் ரம்போசா வை சிறிலங்காவிற்கும் சூடானிற்குமான விசேட தூதுவராக நியமித்தார். இதைத்தொடர்ந்து தென்னாபிரிக்க சர்வதேச தொடர்பாடல்களுக்கும் ஒத்துழைப்பிற்குமான உதவி அமைச்சர் செல்வி. நொமண்டியா எம்பெக்றோ சிறில் ரம்போசாவுடன் 2014 ஜூலை 7-9 களில் கொழும்பிற்கு சென்றிருந்தனர். ஆரம்பகட்ட தகவல்களைச்சேகரித்த தென்னாபிரிக்கா இந்நடவடிக்கையை இடைநிறுத்தி இருந்தது. இருந்தும் பெபரவரி 2015 இல் சிறிலங்காவின் புதிய அரசு அழைப்பை புதுப்பித்தது. இப்புதிய அழைப்பையடுத்து தென்னாபிரிக்கா முன்னோக்கு தொழில் நுட்ப குழு ஒன்றை 23-17 பெப்ரவரி 2015 களில் ; செல்வி. நொமண்டியா எம்பெக்றோ தலமையில் கொழும்பு அரசியல் கட்சிகளையும் ராஜதந்திரிகளையும் சந்தித்தது. இவ்விஜயத்திற்குப் பின்னர் புலம்பெயர் தமிழருடனும் தென்னாபிரிக்க தமிழருடனும் செல்வி. நொமண்டியா எம்பெக்றோ தொடர்பை ஏற்படுத்தினார். மே 18. நொமண்டியா எம்பெக்றோ பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் அழைப்பை விரிவுபடுத்தினார். மே 28. கூட்டம் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள தென்னாபிரிக்க தூதுவராலயத்தில் கூட்டம் நடைபெறும் எனவும்; இரகசியமாக வைத்திருக்கும் படியும் எந்தவிதமான இலத்திரனியல் கருவிகளான கணனி, கைததொலைபேசி, புகைப்படக்கருவி எவையும் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அறிவுறத்தப்பட்டது. இதே சந்திப்பில் ஐரோப்பிய மற்றும் கனடாவில் உள்ள பல அமைப்புக்களை குடையாக கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அனைத்துலக மக்கள் அவை, அமெரிக்காவில் இருந்து இயங்கும் USTPAC மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசு- வி.உருத்திரகுமாரன் அணிப்பிரதிநிதி ஒருவரும் கலந்துகொண்டனர். இதேவேளை உலகத் தமிழர் பேரவை (GTF) பிறிதொரு கூட்டத்திற்கு காலையில் அழைக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு கனேடிய தமிழ்க்காங்கிரஸ் (CTC) மற்றும் நோர்வே மக்கள் அவையின் (NCET) ஒரு பிரதிநிதி ஆகியோரும் இச்சந்திப்பின் பிரசன்னமாக இருந்தனர் எனவும் தகவலகள் கூறுகின்றது. நோர்வே மக்கள் அவையின் வௌ;வேறு பிரதிநிதிகள் இரு பிரிவுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். தென்னாபிரிக்க குழுவினரிடம இரு பிரிவுகளும் இனஅழிப்பை விசாரிக்க சர்வதேச விசாரணையே சமரசத்திற்கான முதற்படி எனபதை வலியுறுத்தி விளக்கினர். உலகத் தமிழர் பேரவை என்ற (GTF) தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுமந்திரன்-சம்மந்தன் பிரிவிற்கு சார்பான “அதிகாரப்பகிர்வு” என்ற பதத்தில் பேசினர். சந்திப்பிற்கு முன்னர் இரு சாராரும் தென்னாபிரிக்காவின் தமிழ் கையாட்களால் விலகிச்செல்லும் வழிமுறைக்கு தயார்படுத்தப்பட்டனர். அனைத்துலக மக்கள் அவை (ICET); சிறிலங்காவினால் செய்யக்கூடிய “விருப்பப்பட்டியலை” எழுத்துருவில் ஒரு வரைபைத் தயாரிக் முனைந்தது. இவ்வரைபு பிரித்தானிய தமிழர் பேரவையினால் (BTF) சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரைபு விலகிச்செல்லும் அனைத்துலக மக்கள் அவையின் பிரிவின் (ICET)ஆதரவைப்பெறவில்லை. சர்வதேச மக்கள் அவையைப்பிரதிநிதிப்படுத்திய அனுபவமிக்க வழக்கறிஞர் ஒருவர் “விலகிச்செல்லும்” தமிழ்க்குழுக்களிடம் “விருப்ப பட்டியல்” என்ற விடயம் கூடி சுமூகநிலையை ஏற்படுத்துவதற்கான விடயங்களாக இருக்கவேண்டும் எனவும் அரசுடனான பேச்சுவார்த்தைகக்கான வழிமுறைகளுக்கு முன்னிபந்தனையாகவும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தென்னாபிரிக்கா இந்த முயற்சியின் வேண்டுதல் சிறிலங்காவிடம் இருந்து வந்தது என்பதையோ சகலவிடயங்களும் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டு வந்தது என்பதையோ மறைக்கவில்லை. தென்னாபிரிக்கா வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்தித்த மூன்றாவது தமிழ் குழு ஐக்கிய இராச்சிய தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். *** மேற்கத்தைய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று («In Transformation Initiative” (ITI)) புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி சிறிலங்காவில் «ஆட்சி மாற்றத்திற்கு» பின்னால் இருந்து வித்திட்டது. தென்னாபிரிக்காவின் செயல்முறைக்கு இணையாக, சிங்கப்பூரில் இவ்வமைப்பு சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது. இதுபற்றி ஜனவரி 2015 இல் தமிழ் நெற்றில் ஒரு பார்வை ஏற்கனவே பிரசுரமாகி இருந்தது. சுவிற்சலாந்து நிதியில் ITI நடத்திய இச்சிங்கப்பூர் கூட்டத்தில் GTF பிரமுகர்களும் பிரசன்னமாகியிருந்தனர். நோர்வேயும் இக்கூட்டம் பற்றி அறிந்திருந்தது. சுவிற்சிலாந்தில் இருந்து இயங்கும் அதிகாரியாயும் படுதோல்விக்குரியவரான நோர்வேயின் சமாதான-தரகர் திரு. எரிக் சூல்கைம் இந்த ITI நடைமுறையில் கடும் அக்கறை காட்டிவருகின்றார். ITI நடைமுறைகள் அனைத்தும் தென்னாபிரிக்காவின் வெளிநாட்டமைச்சிற்கும் அறிவிக்கப்படுகின்றது எனவும் கூறப்டுகின்றது. தென்னாபிரிக்க நடவடிக்கைக்கென சிறிலங்காவின் வெளிநாட்டமைச்சர் திரு. மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் படுதோல்வியான சமாதான-தரகர் திரு. எரிக் சூல்கைமையும் இணைக்க ஆர்வப்படுகின்றார். எரிக் சூல்கைமிற்கும் சக்திகளுக்கு சேவை செய்யும் பசி இன்னும் அடங்கியதாகத் தெரியவில்லை. இந்த சிங்கப்பூர் செயல்முறையும் தென்னாபிரிக்காவின் செயல்முறையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை என தகவல் அறிந்த பிரித்தோரிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. *** இதேவேளை தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசியல் சட்ட நீதிபதி அல்பி சச்ஸ் உடன் பெரு நாட்டின் உண்மை ஆணைக்குழுவின் ஆணையாளர் எடுராடே கொன்சாலோ உம் ஜூன் 9 ம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒரு வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். இம்மாநாடு சிறிலங்காவில் உண்மை, நீதி, சட்டம் என்பவை பற்றி ஆராய உள்ளது. கொழும்பை இருப்பிடமாகக்கொண்டு இயங்கும் «சர்வதேச இனங்களுக்கான கல்வி மையம் (ICES) ஒழுங்குபடுத்தியுள்ள இம்மாநாட்டில் «LLRC பாலிகக்காரா» என அழைக்கப்படும் வடமாகண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ். பாலிகக்காரா வரவேற்புரையாற்றவுள்ளார். நன்றி TamilNet