இலண்டன் சந்திப்பானது பிளவுகளை ஏற்படுத்துவது, திறைசோியை நிரப்புவது, விசாரணைகளை மழுங்கடிப்தே – சிவாஜிலிங்கம் June 9, 2015 News புலம்பெயர்ந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, அரசாங்கம் உலக தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தையை நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மற்றும் புலம்பெயர்ந்த மக்களும் ஒரே நோக்கத்தில் செயற்பட்டால் விரைந்து அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.பஆனால் இதனை முறியடிப்பதற்கான சூழ்ச்சியாகவே தற்போதைய பேச்சுவார்த்தைகள் அமைகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்து, தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஒன்றை ஒருவாக்கிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.பதிவு இணைய செய்தி அத்துடன் புலம்பயர்ந்த அமைப்புகளை சிக்கலில் தள்ளிவிடும் சூழ்ச்சியாகவும் இதனை பார்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் சுருக்கத்தினை இங்கே தருகிறோம். தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சந்திப்புக்களைப் பார்க்கின்றது பொழுது, இரண்டு விடயங்கள் முன்னகர்த்தப்படுகின்றன. ஒன்று சிறிலங்கா அரசாங்கம் சில தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபகின்றது. இரண்டாவது, அந்நாட்டுக்கு சார்பான அரச சார்பற்ற நிறுவனங்களால் சமாந்தரமாக பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஒரு வகையில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதாவது புலம்பெயர் அமைப்புகளிடையே போட்டித் தன்மையை ஏற்படுத்தி, எல்லாரையும் ஒரே இடத்திற்குக் கொண்டு சென்று ஒரு விடயத்தில் சிக்க வைப்பதற்கான ஒரு சூழ்ச்சியில் சிக்கவைக்கும் முயற்சியாகவே இது தென்படுகின்றது. இவ்வகையான சந்திப்புக்கள் புலம்பெயர் தமிழர்களைப் பிளவு படுத்துகின்ற முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதேநேரம் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு தீர்வை முன்வைப்பதற்கான ஒரு புறச்சூழலை குழப்பியடிக்கின்ற முயற்றியாகவும் இது இருக்கின்றது. தமிழகத்தில் இவ்வாறு குழப்பியடிக்கின்ற நிகழ்ச்சி நிரல்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று தாயகத்திலும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் தான் வெளிநாடுகளில் நடைபெறுகின்ற சந்திப்புகளைப் பார்க்க வேண்டும். இப்போது கூறப்படுகின்றது அபிவிருத்தி தேவை. எதிர்வரும் செப்ரெப்பர் வெளிவரும் அறிக்கையைத் தொடர்ந்து இலங்கைத் தீவில் ஒரு உள்ளக விசாரணை தேவை என்று தாயாகத்திலிருந்து சென்ற ஒருவரும், புலம்பெயர் தேசத்தில் இருக்கும் ஒரு சிலரும் கூற முன்படுகிறார்கள். இது ஒரு பாரதூரமான கருத்துக்கள். இது எமது இனத்திற்கு அழிதரக்கூடிய கருத்துக்கள். எதிருவரும் செப்ரெம்பர் மாத ஐ.நா அறிக்கையைத் தொடர்ந்து உள்ள விசாரணையை மேற்கொள்ளவதற்கு அனைத்துலக கண்காணிப்பின் பெயரில் நடைபெறும் என ஏமாற்று வித்தை அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும் ஒரு சிலரும் அரங்கேற்றுவதற்கு முயற்சி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நடடிவக்கையில் நம்மவர்களும் துணைபோவது தான் வேதைனையிலும் வேதனை. சுதந்திரமான அனைத்துலக விசாரணை வேண்டும் என்ற ஒரு நல்லதொரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டும். எங்களுக்கு இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நல்லதொரு தீர்ப்பினை நாங்கள் பெறுவதற்கு நாங்கள் இறுக்கமாக இருக்க வேண்டும். இதைவிட எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு தேவை. இதுதொடர்பில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது எல்லாம் ஒரு இழுபறியான நிலமை. கடந்த காலத்தில் நோர்வே ஒரு அணுசரணையாளராக பங்காற்றினார்கள். அதன் விளைவை நாங்கள் கண்டோம். வெள்ளைக்கொடி விவகாரத்தில் திரு.நடேசன், புலித்தேவன் போன்றோருக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிவோம். எனவேதான் மத்தியஸ்தரர்களாக அமொிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகள் செயற்பட வேண்டும். சாட்களுக்காக சில தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து கொள்ள வேண்டும். இதன்போது ஒரு அனைத்துலக உத்தரவாதம் கிடைக்க வேண்டும். இதேநேரம் இடைக்காலத்தில் வடக்கு கிழக்கில் ஒரு புனர்வாழ்வு வேண்டும் என்றால் அதையும் ஏற்றுக்கொள்கிறோம். கடந்த காலங்களில் வெளிநாடுகள் உதவி செய்வதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்தியா மட்டும் 50 ஆயிரம் வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதியளித்திருந்தது. ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு திட்டங்களைக் கொடுங்கள். அனுமதியை வழங்குங்கள். மாவட்ட மாவட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் திட்டங்களைக் கொடுங்கள். இவை நிறைவேற்றக்கூடியதாக இருக்கும். இதைவிடுத்து புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தினைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சி எடுக்கிறோம் என்கின்ற கபட நாடகத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை எடுக்கப் போகின்றீர்கள் என்றால் ஆகக்குறைந்தது வடக்கு கிழக்கு மாகாணங்களின் முதலமைச்சர்களின் நிவாரண நிதியத்தினை அங்கீகரித்து அதன் ஊடாக பணத்தினை அனுப்புங்கள். அதனை நாங்கள் புலம்பெயர் தமிழர்களிடம் கேட்கலாம். அதை வைத்துக்கொண்டு இங்கே வறண்டு போயிருக்கின்ற சிறிலங்காவின் திறைசோியை நிரப்புகின்ற ஏமாற்று நாடகங்களுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைப் பயன்படுத்துகின்ற ஏமாற்று வித்தைகள், செப்படி வித்தைகள் எல்லாம் எங்களுடைய தமிழ் மக்களின் போராட்டங்களை, எங்களுடைய கோரிக்கைகளை, குறிப்பாக இனப்படுகொலை விசாரணையை , சுதந்திரமான அனைத்துலக விசாரணையை மழுங்கடிக்கின்ற முயற்சியாகவே இதனைப் பார்க்க முடியும் என சிவாஜிங்கள் அவர்கள் மேலும் தனது கருத்தை தாயக மக்களிடமும், புலம்பெயர் மக்களிடம் முன்வைத்துள்ளார்.