நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ள இன்று வரை மறுக்கின்ற கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் பிரிட்டனில் நடத்திய ரகசிய சந்திப்பு தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்டுள்ள அப்பட்டமான துரோகமென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.

ஜெர்மனில் பேர்கொவ் பவுண்டேசன் ஏற்பாட்டினில் நடைபெற்ற கூட்டத்தினில்  நடந்தது இன அழிப்புத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளவும் பொதுசன வாக்கெடுப்பு தேவையில்லையென்ற நிலைப்பாட்டையும் கடைப்பிடித்திருந்த கூட்டமைப்பும் ஜிரிஎவ்ப் அமைப்பினரும் இன்று வரை அதனையே கடைப்பிடிக்கின்றனர்.அத்தகைய தரப்பினர் நடத்திய இரகசிய சந்திப்பு எத்தகையதாக இருக்குமென்பது பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

வீடமைப்பு உதவிகள் பற்றி தான் பேசுவதென்றால் அதனை கொழும்பினிலேயே பேசியிருக்கலாம்.இலண்டனிற்கு பறந்து திரிந்திருக்கவேண்டியதில்லையெனவும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் அவர் கருத்து வெளியிட்டார்.
20 வது திருத்த சட்டம் என்பது அரசுகள் சிறுபான்மையின வாக்குகளினில் தங்கியிருக்க கூடாதென்ற அடிப்படையினில் கொண்டுவரப்படும் முயற்சியென தெரிவித்த அவர் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீhவொன்று தரப்படாத நிலையினில் இத்திருத்தம் பற்றி பேசுவது பயனற்றதெனவும் தெரிவித்தார்.

நன்றி;பதிவு