எதிர்வரும் சனி ஞாயிறு நாட்களில் (20-21.06.2015) மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2015 மிகச்சிறப்பாக நடைபெற இருக்கின்றது.இம்முறை புதிய விளையாட்டு மைதானத்தில் புதிய சிறப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மைதானம்: Romerike Friidrettsstadion (Skedsmohallen, Leira veien 2, 2000 Lillestrøm)
[ Kjør i E6, ta av veien ved Olavs Gård, kjør forbi Esso bensinstasjon da kommer du til en rundkjøring. Ta høyre ved rundkjøring mot Fetsund og kjør i Fetveien. Du må kjøre forbi 4 nye rundkjøringer inn til du kjører under en jernbanebru. Etter Jernbanebru, ta venstre til det første krysset. Skedsmohallen ser du til venstre.]

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவானது நோர்வே வாழ் தமிழ் மக்களை ஒன்றிணைப்பதோடு எங்கள் எதிர்கால சந்ததிகளின் விளையாட்டு திறனை அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் நோர்வேயின் தேசிய விளையாட்டுகளிலும் சர்வதேச விளையாட்டுக்களிலும் விளையாடி தமிழர்களுக்கு பெருமைசேர்ப்பதற்கு களமாகவும் அமைகின்றது.

இந்த விளையாட்டுக்களை முன்னெடுப்பவர்கள் நடத்துபவர்கள் மக்களின் நலன் சார்ந்து சமூகத்தின் வளர்ச்சி சார்ந்து நெடுங்காலமாக அளப்பரிய பணிகளை செய்து வருகின்றார்கள் இதற்கு மக்களின் பூரண ஆதரவு ஒவ்வொரு ஆண்டும் கிடைத்து வருகின்றது. இதனால்தான் சிறப்பாக  நடைபெற்று வருகின்றது.

இதேபோன்று இம்முறையும் முழு ஆதரவுடன் இளையவர்களின் புதிய திட்டமிடலுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

 

Viktig info til klubberInfo2Ny regel for lengdehopp

MV2015 EventListe2015 - Over16MV2015 EventListe2015 - Under16