தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் வருடாவருடம் நடாத்தப்படும் 16வது வருட மாவீரர்நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2015 இன் முதலாம் நாள் விளையாட்டுக்கள் இன்று(20.06.05) காலை 9மணிக்கு ஆரம்பமாகியது.

no2no1
தமிழீழத் தேசியக்கொடியும் நோர்வேயின் தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு தாயகவிடுதலைக்காக காவியமான மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகச்சிப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.
no3no4
இவ்விளையாட்டு விழாவில் நோர்வேயி;ல் இருக்கும் தமிழ் விளையாட்டுக்கழகங்களான செங்கதிர் வி.க, இளம்தளிர் வி.க, Drammen.வி.க Northboys.வி.க, Stovner. வி.க, 11stars.வி.க, Everest.வி.க, Nooral.வி.க என்பன கலந்து கொண்டு கடுமையான போட்டிகளை கொடுத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருந்தனர்
அத்தோடு மைதானத்தின் வெளிப்புறத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழீழ உணவகத்தில் தாயகத்தின் மணம் கமழும் தோசை அப்பம் பிட்டு கொத்துறொட்டி பிரியாணி மற்றும் சிற்றூண்டி தின்பண்டங்கள் என நாவுக்கு ருசியாகவும் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் சிறுவர்களை மகிழ்வூட்டும் விளையாட்டுக்களும் தமிழர் விளையாட்டு விழாவை மேலும் அழகுபடுத்தியிருந்தன.
இதேவேளை மாவீரர் நினைவாக நடாத்தப்படும் தமிழர் விளையாட்டு விழாவுக்கான இரண்டாம் நாள் விளையாட்டுக்கள் ஞாயிற்றுக்கிழமை(21.06.15) காலை 9மணிக்கு இன்னும் சிறப்பாக நடைபெற இருக்கின்றது.