இனப்பிரச்சனையென்பது தமிழ்த்தேசம் அழிக்கப்பட்டு வருவதனால் ஏற்பட்ட பிரச்சனையே. தமிழ்தேசத்தை தாங்கும் தூண்களான நிலம், மொழி ,பொருளாதார, கலாச்சாரம் என்பன திட்டமிட்டு அளிக்கப்படுவதனால் ஏற்பட்ட பிரச்சனையே. இதுவரை கால இன விடுதலை போராட்டம் தமிழ்தேசத்தை அழிப்பவனுக்கும் அவ்ழிப்பில் இருந்து தேசத்தை பாதுகாக்க முயல்பவர்களுக்கும் இடையிலான போரட்டமே. எனவே தேசத்தை அங்கிகரிப்பதுதான் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வடமராட்சி குடத்தனையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்திலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது.

இந்தியாவும் மேற்குலகும் 13 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தை அரசியல் தீர்வாக திணிக்க முயற்சிக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்கேற்ப தாயகம் தேசியம் சுயநிர்ணையம் என்கின்ற தமிழ் மக்களின் அடிப்படை கோட்பாட்டையும் கைவிட்டுள்ளனர்.

இந்த செயற்பாடு தமிழ் தேசிய அரசியலை செங்குத்தாக கீழ் இறக்குகின்றது. 13 ஆவது திருத்தமும் அதன் அடிப்படையிலான மாகாண சபை முறையும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கப் போவதில்லை.வரதரஜபெருமாளின் வட-கிழக்கு மாகணசபையும், பிள்ளையானின் கிழக்கு மாகாணசபையும், விக்னேஸ்வரனின் வடமகாண சபையும் அதனை தெளிவாக நிரூபித்துள்ளது.

வரதராஜ பெருமாள் மாகண சபை முறையில் எந்தவித பயனும் இல்லை என கூறி ஈழ பிரகடனம் செய்தார். பிள்ளையான் ஒரு பீயோனை நியமிக்கும் அதிகாரம் கூட தனக்கு இருந்திருக்கவில்லை. எனக்கூறினார். விக்னேஸ்வரனின் கருத்துகள் ஆளுநரை மாற்றிய பின்னரும் கூட குறையவில்லை. இவ்வளவு அனுபவத்தின் பின்னரும் கூட மாகணசபை முறையினை அரசியல் தீர்;வாக ஏற்றுக் கொண்டால்இ அவர்களை துரோகிகளாகவே கருதவேண்டும்.இந்த தேர்தலில் மக்கள் அவர்களை இனங்கண்டு புறக்கணிக்கவேண்டும் என்றார்.

எங்கள் கொள்கைகளை ஏற்று இயக்கமாக செயற்பட அணிதிரளுங்கள்

தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் போராடி பெற்றுக் கொண்டதாக வரலாறு எமக்கு கற்பிக்கின்றது. தமிழ்தேசியமக்கள்முன்னணியின் சிந்தனையும்அதுவேமக்கள்மயப்படுத்தப்பட்ட இயக்கமாக நாம் உரிமை களையும், எங்கள் தேவைகளையும்பெற்றுக்கொள்வோம்  என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  செவ்வாய்கிழமை(21) மாலை யாழ்.மணியந் தோட்டம் பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின்போது  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ManiyamThottam

 

நன்றி.  இது நம் தேசம்

மேலதிக ஒளிப்படங்களுக்கு