நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தின் உதவி

5321

நோர்வே சிறுவர் இளைஞர்  சுய அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரனையுடன் வலி வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் கௌரவ சண்முகலிங்கம் சஜீவன் அவர்கள் அளவெட்டி முதலியவேள் முன்பள்ளி மாணவர்களுக்கு
பெறுமதியான  கற்றல் உபகரணங்களை வழங்கியதுடன் முன்பள்ளிக்கும் மிகவும் பெறுமதியான கற்பித்தல் சாதனங்களை வழங்கியுள்ளார்.
அறிவாயுதமே எமது பலம் – கல்வியே எமது வாழ்வாதாரம்”  எனும் கொள்கையுடன்  சமூகசேவை செய்துவரும் நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தினர் உப தவிசாளர் கௌரவ சண்முகலிங்கம் சஜீவன் ஊடாக பல்வேறுபட்ட செயற்பாடுகளை வட மாகாணத்தில் பரவலாக மேற்கொண்டு வருகின்றனர்.
முதலியவேள் முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து எந்த விதமான நிதியையும் பெற்றுக்கொள்ளாதுஇ முற்றிலும் இலவசமாகவே கற்பித்தில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனத்தினர் உப தவிசாளர் கௌரவ சண்முகலிங்கம் சஜீவன் ஊடாக முதலியவேள் முன்பள்ளிக்கு வழங்கிய உதவிகளை முதலியவேள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் நன்றியுடன் பாராட்டுகின்றனர்.