வடமாகணசபை முதல்வர் நீதவான் திரு. விக்னேஸ்வரனும் மற்றும் தமிழ் பொது அமைப்புக்களின் சமூகமும் (TSCF); சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்யும் ஐ.நா வின் இரகசிக திட்டத்தை விமர்சரித்துள்ளனர்.
சிறிலங்கா அரசும் ஐ.நாவின் செயலக அதிகாரிகளும் இரகசியமாக உள்ளக விசாரணைத்திட்டம் ஒன்றை தயார்செய்துள்ளனர் என சனல் -4 செய்திவெளியிட்டுள்ளது.  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை மேற்கோள்காட்டி செவ்வாய்க்கிழமை சனல் -4 செய்திவெளியிட்டுள்ளது.  வடமாகணசபை முதல்வர் “சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்யும் செயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா செய்யும் துரோகம்“ எனக்கண்டித்துள்ளதாகவும் தமிழ் பொது அமைப்புக்களின் சமூகம் மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் பிரிவு தனது நம்பகத்தன்மையை நிலைநாட்ட ஐ.நாவின் பிரிவுத்தலைவர் சயத் றோட் அல் குசைன் உடனடியாக செயல்படவேண்டும் எனக்கோரியுள்ளதாகவும் சனல் -4 மேலும் தெரிவித்தது.

சிறிலங்காவின் உள்ளக விசாரணை ஒருபோதும் தமிழ்மக்களுக்கு நீதியை வழங்காது என தமிழ் பொது அமைப்புக்களின் சமூகம் தொடர்ச்சியாக கூறிவருகின்றது.

 

மேலதிக தகவலுக்கு