அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம்- தமிழர் ஒருங்கிணைப்பு குழு ( ஐக்கிய இராச்சியம் )

அன்புடையீர்,

தமிழின அழிப்பிற்கு நீதிதேடி வரும் 22.08.2015 சனிக்கிழமையன்று இலண்டனில் அரசறிவியல் மற்றும் இராசரீக ஆய்வரங்கம் ஒன்றைப் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்த் தேசிய அரசறிவியலாளர்கள், இராசரீகவியலாளர்கள், சட்ட நிபுணர்கள், இதழியலாளர்கள், மூத்த செயற்பாட்டாளர்கள் போன்றோர் இவ் ஆய்வரங்கில் பங்கேற்றுத் தமது அனுபவங்களையும், நிபுணத்துவ அறிவையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்கள். அனைத்துலக பரப்புரைகளில் கையாளப்பட வேண்டிய யுக்திகள், இன்றைய உலக ஒழுங்கில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், பரப்புரைத் தளத்தில் தமிழ்த் தேசிய ஊடகங்களின் பங்கு ஆகிய தலைப்புக்களின் கீழ் மூன்று அமர்வுகளாக இவ் ஆய்வரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமர்விலும் பங்கேற்கும் பேச்சாளர்களின் உரைகளைத் தொடர்ந்து கேள்வி-பதில் அடிப்படையிலான விவாதமும் நடைபெற இருக்கின்றது.

இதில் தாங்களும், தங்களது செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு அமர்வுகளும், விவாத அரங்குகளும் ஆக்கபூர்வமாகவும், பயனுள்ளதாகவும் அமைவதற்குப் பங்களிப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ் ஆய்வரங்கிற்கான ஆசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதால், இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உங்களது செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்களை வரும் 10.08.2015 நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி.

இங்ஙனம்,

ஆய்வரங்க ஏற்பாட்டுக் குழு,
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
confarance220815