வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மையை வெளியிட்டு கூட்டமைப்பை மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் அந்தரங்க விடயங்கள் என்ன என்ன என்பதை அப்பட்டமாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர்.

நான் இவற்றைச் சொன்னால் பெரும் பிரச்சனை ஆகிவிடும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில் எனத் தெரிவித்துவிட்டு முதலமைச்சர் சொன்ன முக்கிய விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன

1. தமிழ் தலைமைகளுக்கு வயசாகிவிட்டது. தலைவர்களாக இருப்பவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

2.தமிழர்களுக்கு அடுத்து வரப்போகும் தலைமைகளாக உள்ள இளையவர்களின் தமைமைத்துவத்தை கூட்டமைப்பு ஏற்படுத்தவில்லை. இதை நான் தமிழ்த் தலைமைகளுக்கு சொல்லியும் அவர்கள் செய்யவில்லை. மாவை சேனாதிராஜா இதைக் கேட்டுவிட்டு ஓம் பாருங்கோ தலைமைகளை உருவாக்கத்தான் வேண்டும் என்று கூறிவிட்டு செல்வாரே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

3ஃ தமிழர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் தொடர்பாகவும், தேவைகள் தொடர்பாகவும், பிரச்சனைகள் தொடர்பாகவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கதைப்பதில்லை.அத்துடன் அதனை வெளி உலகிற்கும் எடுத்துச் சொல்வதில்லை.

4) நான் தீவிரவாதக் கருத்துக்களை கூறுவதாக என்னை கூட்டமைப்பினர் எச்சரிக்கின்றனர். நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் இங்கு வந்தபின்னர் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் பிரச்சனைகளை அறிந்த பின்னரே எனக்கு இவ்வாறான நிலைப்பாடு எடுக்க தோன்றியது. குறித்த மக்களால்தான் என்னை மாற்றினார்கள்.

5) மக்களின் பிரச்சனைகளை அறிந்த எனக்கு 13வது திருத்தச்ச சட்டம் பற்றி பாராளுமன்றிலோ அல்லது வேறு எங்கிலோ கதைத்துக் கொண்டிருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் தமிர்களுக்கு மேலதிக அதிகாரம் தேவை.

6) தமிழ்த் தலைமைகள் மக்களோடு மக்களாக வாழ்ந்தால் தான் மக்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம். அதை விட்டுவிட்டு அந்த அந்த நேரத்திற்கு மாத்திரம் வந்து மக்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டுச் செல்பவர்களையும் தமது குடும்பங்கள், பிள்ளை குட்டிகளை வெளிநாடுகளில் தங்க வைத்துவிட்டு தமிழர்களையும் தமிழ்த்தேசியத்தையும் வைத்து வியாபாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது.

7) இவ்வாறு இருப்பவர்களுக்கு நான் ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டேன். ஒரு போதும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டேன். நான் நடுநிலையாகவே இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வீயோவில் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா மிகவும் உணர்வுவாக கவலையுடனும் விரக்தியுடனும் தனது கட்சியில் உள்ளவர்களை மதிப்பிடுவதையும் தயவு செய்து கேளுங்கள். அனைத்தையும் புரிந்து கொள்வீர்கள்.