“இம் மாதம் 17ந் திகதி; காலையில் எந்தக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள் என்பதை முதலில் மனதில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அக்கட்சி எமது தனித்துவத்தையும் சுயநிர்ணயத்தையும் உறுதிப்படுத்தும் கட்சியாக இருக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னுந் தாயகம், தனித்துவம், தமிழர் சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்து வருகின்ற கட்சியாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனஅழிப்புக்கு நீதிதேடுவதற்குப் பின்னிற்காத கட்சியாக, சுதந்திரமான சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் உறுதியுடன் உள்ள கட்சியாகத் திகழ வேண்டும். சரணகதியடையாமல், எமது தனித்துவத்தையுஞ் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி வரும் கட்சியை அடையாளங் காணுவது உங்களுக்குச் சிரமம் அளிக்காது என்று எண்ணுகின்றேன்.”
நன்றி:பதிவு