தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 19.09.2015 சனிக்கிழமை மாலை 6மணிக்கு chateau neuf மண்டபத்தில் மிக எழுச்சியோடு நடைபெற இருக்கின்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு நிகழ்சிகளாக சுதந்திரகானம் பாடல் போட்டி மற்றும் சுதந்திரத்தாண்டவம் ஆடல் போட்டி என்பன சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

இந்த நிகழ்சிகளுக்கான விண்ணப்பமுடிவுத்திகதி இம்மாதம் 19.08.2015 என்பதை அறியத்தருவதோடு இந்த நிகழ்சியானது எமக்கான விடுதலை தாகத்தை தக்கவைத்து அதனூடாக விடுதலைக்கான பயணத்தை சோராது பாதுகாத்துக் கொள்ளும் ஒரு கலைக் களமாக அமைகின்றது.

இந்த நிகழ்வானது முழுக்க முழுக்க எம்மவர்களின் படைப்புக்களோடு மேடை ஏறுகின்றது என்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியாகவுள்ளது.

ஆகவே எம் மத்தியில் இலை மறைகாய்களாக இருக்கும் பாடும் திறன் உள்ளவர்கள் ஆடும் திறன் உள்ளவர்கள் போட்டிகளில் இணைந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்துவதோடு பரிசில்களையும் பெற்றுக்கொள்ளலாம்.