திலீபன் உண்ணாநிலைஇருந்த மண்ணில் சுமந்திரன்கள் வெற்றி பெறுவது என்பது 2009 நிகழ்வைவிட துயரமானது..

சர்வதேச விசாரனையையும், இனப்படுகொலை குற்றச்சாட்டையும், சுயநிர்ணய உரிமையையும் கைகழுவி விட்டு தேர்தலை எதிர்கொள்கிறது… புலிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் கூட்டமைப்பு என்கிற பின்னனியை வைத்து ஈழமக்களிடம் துரோக அறிக்கையை முன்னிறுத்துகிறது….

வலிமையான இயக்கம் அரசியல் களத்தில் இல்லையெனில், தேர்தல் அரசியல் துரோக அரசியலையே முன்னெடுக்கும் என்பதற்கு மற்றுமொரு உதாரணத்தை தமிழர்கள் காண்கிறார்கள்.

நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, எட்டி உதைக்கப்பட்டு தலையில் சுடப்படும் பொழுதும் கூட ஈழவிடுதலையை கைவிடாத போராளியின் கடைசி நிமிடத்தில் அவர்களிடம் எஞ்சி இருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதீர்கள்.

த.தே.கூட்டணியின் தலைமை வரலாற்று சிறப்பு மிக்க துரோகத்திற்கு தயாராகி நிற்கிறது. ஈழத்து இளைஞர்களும், யாழ்பாண பல்கலைக்கழக மாணவர்களும் ஈழவிடுதலை அரசியலை கையிலெடுக்கும் காலம் இது. தேர்தல் கடந்த அரசியல் போராட்ட களத்தை கட்டி எழுப்புங்கள்.

சுமந்திரன்கள் வெற்றிபெருவது தமிழகத்தின் மற்றுமொரு அரசியல் தோல்வியையே காட்டும். தமிழகமே வீரியம் கொள். மேற்குலகமும், இந்தியாவும் இலங்கை அரசியலை நடத்தும் பொழுது எதிர்வினையாற்றும் வலிமையுடைய நாம் மெளனம் காப்பது மற்றுமொரு துரோகமாகவே சென்றடையும்…