சர்வதேசமே

ஊரை உறவை
உன் கருணையால்
மீட்டெடுத்து
அடுத்தவனைப்போல்
வாழ்வின் வசந்தத்தில்
எம்மை நாமே ஆழ
வாழ விடு.

எத்தனை எத்தனை குரல்கள்
எத்தனை எத்தனை குமுறல்கள்

கேட்கவில்லையே…

நீங்கள் சொன்னதெல்லாம்
நாங்களே
எமது மண்ணை விட்டு
வெளியேறவேண்டுமென்பதுதான்.

ஆண்டாண்டு காலமாய்
பாட்டன் பூட்டியோடு
வாழ்ந்த மண்ணை விட்டு
பண்பாட்டு விளிமியங்களோடு
பழகிய ஊரை விட்டு
கொத்தணிக்குண்டுகளால்
கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட
உறவுகளின் உடலங்களை விட்டு

பசியும் பட்டிணியும்
உயிரை வெட்ட
நோயும் பிணியும்
உடலை வதைக்க
வெறும் கூடுகளாய்
வெளியில் வந்தோம்.

ஆனாலும் என்ன ?

அடுத்தவேளை உணவுக்காய்
அங்கலாய்த்து நிற்கும்
அவலக் கோலம்.
காலைக்கடனுக்கும்
குடிநீருக்கும்
குளிநீருக்கும்
வரிசையில் நிற்கும்
வதைக்கோலம்.

ஈரைந்து மாதம் சுமந்து
ஈன்றெடுத்த பிள்ளையை
ஈனரின் புனர்வாழ்வு பூதத்துக்கு
காவுகொடுக்கும் காலம்.

மீண்டுமொரு
மறைமுக இனச்சுத்தீகரிப்புக்கு
இரையாகிப்போனோம்.

இப்போது
ஒன்று மட்டும் புரிகிறது
ஒட்டுமொத்த உலகத்தின்
அரசியல் ஆசைக்குள்ளும்
வியாபார பசிக்குள்ளும்
நசிங்கிப்போனோம்
என்பதுதான்.

ஆனாலும்
ஆணிவேர் அறுபடாத
ஆலமரம் துளிர்விடும்
மீண்டும்
கிளை பரப்பும்
என்பதுதான்
யதார்த்தம்.

”வேட்டி” குறுப்படம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியீடு செய்யப்பட்டது. இயக்குநர் கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ளது வேட்டி குறும்படம்.

நன்றி;பதிவு