முள்ளிவாய்காலோடு எல்லாமே முடிந்துவிட்டது என்ற மாயை மிகவும் கச்சிதமாக பரப்பப்பட்டு தமிழ்மக்களின் விடுதலை உணர்வை சிதறடிக்க எதிரிகளும் உதிரிகளும் கடுமையாக செயற்பட்டார்கள் ஆனால் ஆயுதபலம் மௌனிக்கப்பட்டாலும் மக்களின் மனபலம் உலக அரங்கில் அரசியல்ரீதியாக உயர்ந்து நிற்பதானது இன அழிப்பாளர்களுக்கு இன்னும் மனப்பீதியை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

எப்படியாவது இனஅழிப்பிற்கான போராட்டத்தினை வலுவிளக்க செய்யவேண்டும் என்ற இலக்கிலிருந்து கொலைகாரர் இறங்கவில்லை என்பது அண்மைக்கால தாயகத்தின் அரசியற்செயற்பாடுகளும் அதனூடாக விலைக்கு வாங்கப்பட்ட பொய்முகங்களின் வருகையும் தெட்டத்தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

இப்போது மீண்டும் புலத்துமக்களின் மனோபலத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் முதுகெலும்பில்தா தமிழ் இணையங்களை பாவித்து எதிரிகள் அரசியல் ஏவுகணையை புலத்து மக்கள்மீது திருப்பியுள்ளார்கள்
எமது தாயக மக்கள் ஏமாற்ற அரசியலுக்குள் தாங்களாகவே வீழ்ந்துள்ளார்கள் என்பதை புலம்பெயர்ந்த தேசம் மிகவும் சோகத்தோடு பார்க்கின்றது ஆனால் உண்மை நீண்டநாள் உறங்காது ஓர்நாள் உறக்கத்தை துறந்து இலக்கை நகர்த்தும் என்ற அசையாத நம்பிக்கை எம்மிடம் நிரம்பிக்கிடக்கிறது

முள்ளிவாய்காலுக்கு பிற்பாடு எந்த நம்பிக்கையோடு இலக்கை நோக்கி நகர்ந்தோமோ அதே நம்பிக்கையோடு
இனியும் புலத்தின் போராட்டம் வெடிக்கும்

சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் ஏதோ எமக்கான சுதந்திரம் போன்று முதுகெலும்பில்லாத கருத்தாளர்கள் ஊதிப்பெருப்பிக்கின்றார்கள்

சுதந்திரத்திற்காக போராடுபவர்கள் சோரம் போனால் நாளை சோறும் கிடைக்காது இதுதான் வரலாறு

-தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்-