சர்வதேச விசாரணை கோரி தீர்மானம்! வடமாகாணசபையில் அதிரடி! September 1, 2015 News இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை அதிரடியாக நிiவேற்றியுள்ளது. இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை முன்னெடுத்திருந்தார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகிய நிலையில் சபையின் வாயிற் பகுதியில் கே.சிவாஜிலிங்கம் தனது கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தார். ‘சர்வதேச நீதி விசாரணை தொடர வேண்டும்’ ‘ கொலையாளியை நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ ‘ உள்நாட்டு விசாரணை எமக்கு நீதி பெற்றுத் தராது’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து கே.சிவாஜிலிங்கம் போராட்டத்தினை கைவிட்டு சபை அமர்வுகளில் பங்கேற்றிருந்தார். சபையில் முதலாவது பிரேரணையாக இணஅழிப்பிற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை தொடர்பாக குறிப்பிட்டு தனது தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார். அதனை கே.சிவாஜிலிங்கம் ஆமோதித்திருந்தார். முதலமைச்சர் தனது பிரேரணையில் ஏற்கனவே வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக பிரஸ்தாபித்ததுடன் சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த முடியாதுள்ளமை பற்றியும் பிரஸ்தாபித்தார். குறிப்பாக றோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடாதுள்ளமை பற்றி சுட்டிக்காட்டிய முதலமைச்சர் கடந்த கால அனுபவங்கள் பிரகாரம் உள்ளக விசாரணை தீர்வேதெனையும் தராதென்பதால் சர்வதேச விசாரணையே தேவையென முதலமைச்சர் முன்மொழிந்திருந்தார்.