சிறப்பாக நடைபெற்ற சுதந்திரகானம் பாடல் போட்டிக்கான தெரிவுப்போட்டி September 6, 2015 News, TCC எதிர்வரும் 19.09.2015 சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வில் நடைபெற இருக்கும் சுதந்திரகானம் பாடல் போட்டி நிகழ்ச்சிக்கான தெரிவுப்போட்டி இன்று மதியம் 12மணி முதல் பிற்பகல் 1500மணி வரை மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழர் கலைபண்பாட்டுக்கழக இசைக்குழுவின் பின்னணி இசையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது இப்போட்டியில் பிறமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இலைமறைகாய்களாக இருக்கும் பாடகர்கள் கலந்து கொண்டு தாயகப்பாடல்களை சிறப்பாக பாடியுள்ளார்கள் இவர்களில் ஒவ்வொரு பிரிவுகளில் இருந்தும் மூன்றுபேரை தெரிவுசெய்துள்ளோம்.அத்தோடு தெரிவுப்போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் கீழ்ப்பிரிவு —————- தாரகை வைதேகி வாகீசன் மத்தியபிரிவு ——————- சமிலா தர்மிகா நிவேதா மேற்பிரிவு —————- சுந்து பாலகுமார் மகான் இவர்களே இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்