இந்த ஆண்டு செப். 13 நாள் நோர்வேயில் நகரசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற இருக்கின்றது. இத்தேர்தல் மூலம் நோர்வே அரசியலில் தமிழர்கள் போட்டியிடுகின்றார்கள்.

புலம்யெயர்ந்த மண்ணின் அரசியல் பிரவேசம் என்பது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது இந்த அரசியல் பிரவேசத்தின் முக்கியத்துவம் இரண்டு முக்கிய விடயங்களை தாங்கி வருகின்றது.ஒன்று வாழும் தேசத்தில் எமக்கான அரசியல் அடுத்தது தாய் தேசத்திற்கான அரசியல் இரண்டு அரசியல் நகர்வுகளிலும் தன்நலம் கருதாது இனத்தின் தனித்துவத்திற்காக செயற்படுவது மிகவும் முக்கியமாகின்றது.

காரணம் ஈழமண்ணில் அன்று தொட்டு இன்று வரை தன்னல அரசியலுக்குள் சுருண்டுபோனதும் அடிமை அரசியலுக்குள் தொலைந்துபோனதும்தான் தமிழ்களின் துயரநிலைக்கு வடிகாலாக மாறியது இந்த நிலை புலம்பெயர்ந்த தேசங்களிலும் ஏற்படாது எமக்காக இறந்தமக்களின் கனவுக்காக சிறு துரும்பாகவேனும் இருப்பது அவசியமாகின்றது.

இதன் அடிப்படையில் நோர்வே அரசியலில் பிரவேசித்த தமிழர்கள் எமக்கான நீதிக்கா குரல் கொடுத்துவருகின்றார்கள் இனிமேலும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை நேர்வே வாழ் தமிழர்களிடம் இருக்கின்றது.

அந்தவகையில் இவ்வருட நகரசபை மற்றும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றவர்கள்

ஹம்சாயினி குணரட்ணம்: ஒஸ்லோ நகரசபை வேட்பாளர்
திலகவதி சண்முகநாதன் லோறன்ஸ்கூ நகரசபை வேட்பாளர
அகிலினா விமலராசன் ; இரொவ்னர் உள்ளூராட்சி சபை வேட்பாளர்
ஆதித்தன் குமாரசாமி இரொவ்னர் உள்ளுராட்சி சபை வேட்பாளர்
சிறீஸ்கந்தராயா குறுறூட் உள்ளுராட்சி சபை வேட்பாளர்
புலேந்திரன் கனகரட்ணம் குறுறூட் உள்ளுராட்சி சபை வேட்பாளர்
ஸ்ரிபன் புஸ்பராஜா உள்சன்வீக் நகரசபை வேட்பாளர்

இவர்கள் சமூகப் பொறுப்புணர்வுடைய ஆளுமை மிக்க தமிழர்கள். தமது சமூகச் செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள். நோர்வேயில் வெளிநாட்டவர்களின் இணைவாக்கம், சமூக ஒருமைப்பாடு தொடர்பான மிகுந்த அக்கறை கொண்டவர்கள்; என்பது முக்கியமாகின்றது
தமிழர்களின் புகலிட அரசியல்; வரலாற்றில் 3 பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது முக்கியத்துவம் வாயந்ததும் முற்போக்கான நிகழ்வாக அமைகின்றது. நீண்ட கால அடிப்படையில் எமது இருப்பின் வேர்கள் இங்கே பதியம் போடப்படவுள்ளன. இந்த யதார்த்தப் புறநிலையில் நோர்வே அரசியலில் எமது பிரதிநிதித்துவம் இன்றியமையாத ஒன்றென்பதை நாம் அறிவோம். நோர்வேஜிய மட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் முகங்களாகி நிற்கும் இவர்களை தேர்தலில் வெற்றியடையச் செய்ய வேண்டிய பொறுப்பு நோர்வே வாழ் தமிழ் மக்களைச் சார்ந்ததாகவுள்ளது.

செப்.13ம் நாள் ஓஸ்லோ நகரசபைத் தேர்தலும் ஒஸ்லோவின் 15 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலும் நடைபெறவுள்ளது. ஒஸ்லோ நகரசபைக்குத் தனியான வேட்பாளர் பட்டியலும் ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தனித்தனியான வேட்பாளர் பட்டியல்களும் வெளியிடப்படும்.
எனவே நீங்கள் வாக்களிக்கும் போது நீங்கள் வசிக்கும் உள்ளூராட்சி சபையில் உள்ளூராட்சி சபை வேட்பாளருக்கு வாக்களிக்கும் அதேவேளை ஒஸ்லோ நகரசபை வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக நீங்கள் இரொவ்னர் உள்ளுராட்சி சபையில் வசிப்பவராயின், தொழிற்கட்சியின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் பட்டியலில் ஒருவருக்கு வாக்களிப்பதோடு தொழிற்கட்சியின் ஒஸ்லோ நகரசபை வேட்பாளர் பட்டியலில் ஹம்சாயினி குணரட்ணம் அவர்களுக்கு வாக்களிக்கலாம்.