நாங்கள் யாவற்றிக்கும் மாற்றத்தை கோரும் இளையோர் படை September 16, 2015 News இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல் பற்றின விசாரணையை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்த மாதம் 31.8.15 திரும்பபெற வேண்டி இளைய தலைமுறை கட்சி,மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கம்,பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்,தமிழ் நாடு மாணவர் இயக்கம் ,மறுமலர்ச்சி மாணவர் மன்றம் மற்றும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து தீவிரவாத அமெரிக்காவின் சென்னை துணை தூதரகத்தில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தை தாக்கல் செய்யாதே என்று கோரிக்கை மனு கொடுத்து இருந்தோம். மேலும் இச்செயலை 100 மணிநேரத்திற்குள் திரும்ப பெற வேண்டும் என்றும் இல்லையேல் உங்களின் வியாபார நிறுவனங்கள் மற்றும் தூதரகத்தின் முற்றுகை செய்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியும் அமெரிக்கா பதில் தராததால் 100 மணிநேரம் கழித்து நாம் வெறும் வாய்சவடால் மக்கள் இல்லை வீரமிக்க இளையதலைமுறை என்றும் ,போர் குணம் கொண்ட மாணவர்கள் என்பதினை உறுதி படுத்தும் பொருட்டு சென்னை KKநகரில் இருக்கும் அமெரிக்காவின் மிகபெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான KFCயை மனித மலத்தையும் மிருக கழிவுகளையும் கொண்டு தாக்கியதோடு மட்டும் இல்லாது உடனே அங்கிருந்து இருகுழுவாக பிரிந்து அமெரிக்க துணை தூதரகத்தில் மீதும் அடித்து கைதானார்கள்.இச்செயல் அமெரிக்காவிற்கு நாம் கொடுத்த பதிலடி அவர்கள் இதுவரை வாங்காததாகவும், எதிர்பாராததாக இருந்திருக்கும் என்பதினை மறுக்க முடியாது. “மனிதநேயமே இல்லாதவனை மனித மலத்தால் அடிப்பது தான் சரியாக இருக்கும்” இது நடந்து இன்றோடு 12நாட்கள் ஆகிருக்கும் நிலையில் இளைய தலைமுறை கட்சியின் முதன்மை செயலாளர் திரு இனியனின் உடல் நிலை கணைய பிரச்சனையால் கடந்த சில நாட்களாக மோசமடைந்து இருக்கிறது.தற்பொழுது அவரை சிறைத்துறை ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறதுகைதில் இருந்து இன்று வரை ஒரு வேலை உணவு கூட உண்ணாமல் இருந்துகொண்டு இருக்கிறார்.மேலும் ஏற்கனவே முடியாமல் இருந்த அவரின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்பட்டு இருந்த நிலையில் மருத்துவர்கள் இனி எதுவும் செய்ய முடியாது வீடிற்கு கொண்டு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.நிலைமை இப்படி இருக்க,அமெரிக்க தூதரக போரட்டத்தில் போடப்பட்ட வழக்கிற்கு பிணை கிடைத்து விட்டாலும் குமாரன்நகர் காவல் துறை KFC போராட்டத்திற்காகபோடப்பட்ட வழக்கிற்கு பிணை கிடைக்கவில்லை.மூன்று நாட்களாக அலைந்து கொண்டு இருக்கிறோம்.காவர்கள் பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க சிறையில் இருக்கும் தோழர்கள் அனைவரும் இனியனின் நிலையை கண்டு கனத்த இதயத்துடன் இருந்தாலும் ஐவரின் நிலைப்பாட்டில் எந்த சங்கடங்களும் இல்லாது போர் குணத்தோடு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.எதுவாயினும் இன்று பிணை கிடைத்தால் அடுத்தகட்ட நகர்வு குறித்த கலந்தாலோசனைகளை முதலில் முடித்த பின் அனைவரும் இனியனின் வீட்டிற்கு சென்று அவரின் தாயரோடு இருப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். ஆம் நாங்கள் யாவற்றிக்கும் மாற்றத்தை கோரும் இளையோர் படை என்பதினை வார்த்தைகளில் மட்டும் இல்லை செயல் படுத்துவதில் எந்த தயக்கமும் இல்லாதவர்கள் என்று உறுதி படுத்தி உள்ளார்கள்…. மாறன் தாணப்பன் ஒருங்கிணைப்பாளர் இளைய தலைமுறை கட்சி 9092807282/8122274273