சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வானது நோர்வேயில் நீண்டகாலமாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நடாத்தப்படும் நிகழ்ச்சி இடைப்பட்ட காலங்களில் ஒருசில வருடங்கள் நடைபெறவில்லை ஆனால் நீண்டகாலமாக விடுதலைக்காக நுழைவுக்கட்டணத்தோடு செய்யப்படும் நிகழ்வு

இந்த நிகழ்வானது இரண்டுவிடயங்களை தாங்கி நிற்கிறது ஒன்று எங்கள் விடுதலைப்போராட்டத்தின் மூச்சு முற்று முழுதாக அடங்கிவிடாது உயிர்பெறுவதற்கு உந்து சக்தியாக இருப்பது குறிப்பாக கலைவளியாக இளையவர்களுக்கு எமது விடுதலையை விழிப்புணர்வை ஏற்படுத்துவது இரண்டாவது இந்த நிகழ்வின் ஊடாக பணரீதியாக இலாபம் கிடைத்தால் விடுதலைக்கான பணிக்கு செலவிடுவதும் தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தளவு உதவி செய்வதும் குறிக்கோளாக இருக்கின்றது