19.09.2015 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு உணர்வோடு நடைபெற்றது ஜநூறுக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர் நிகழ்வானது அனைத்து மாவீர்கள் நினைவோடும் சுடர்வணக்கம் ஏற்றபட்டு மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர்வணக்க நடனத்தோடு ஆரம்பமாகியது.
SGA_001212006662_10204551600542413_4493400480037167048_o12010699_10204551557581339_8452515742833489287_o12029690_10204551588742118_5845767735616987725_o

 

 

 

தொடர்ந்து வேட்டி குறும்படம் திரையிடப்பட்டு செல்வி நிதுலா ஞானச்சந்திரனின் தமிழா நீங்கே இறுவட்டு வெளியீடு இயக்குனர் கௌதமன் மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோரால் வெளியீடு செய்யப்பட்டது இதனை தொடர்ந்து அன்னைபூபதி தமிழ்கலைக்கூட மாணவர்;களின் சிறப்பு நடனம் தயாநிதி குணாளன் மற்றும் ஒஸ்லோ கலைஞர்களின் சிரிக்கவும் சிந்திக்கவும் நகைச்சுவை நாடகம் பாகம்1ஜ தொடர்ந்து சுதந்திரதாகம் பாடல்ப்போட்டி மிகச்சிறப்காக நடைபெற்றது

இப்போட்டியில் கீழ்ப்பிரிவில் வாகீசன் கீதானந் மத்திய பிரிவில் நிவேதா பிரான்சிஸ் மேற்பிரிவில் பாலகுமார் குமாரலிங்கம் ஆகியோர் பணப்பரில்களை வென்றனர் மிகவும் கடுமையாக நடைபெற்ற இப்போட்டியில் கீழ்பிரிவில் வைதேகி தயாபரன் தாரகை இராஜதுரை மத்தியபரிவில் தர்மீகா காந்தீஸ்வரன் சமீலா ஞானச்சந்திரன் மேற்பரிவில் சுந்தா தம்பாபிள்ளை மயூரன் இந்திரமூர்த்தி ஆகியோர் சிறப்பு பரசில்கள்களை வென்றனர்

இப்போட்டியை தொடர்ந்து சுதந்திரத்தாண்டவம் ஆடல்ப்போட்டி மிகச்சிறப்பாகவும் உணர்வாகவும் இளைவர்கள் படைத்திருந்தர்கள் இப்போட்டியில் சூரைக்காற்று புலத்தமிழ் அடுத்ததலைமுறை நடனக்குழுக்கள் கடுமையான போட்டிகளை வழங்கியிருந்தார்கள் இப்போட்டியில் சூரைக்காற்று வெற்றிவாகை சூடியது
தொடர்ந்து நகைச்சுவை நாடகம் பாகம்2 தமிழீழப்பாடகர் வசீகரனின் வசீகரமான குரலில் தமிழர்கலைபண்பாட்டுக்கழக இசையில் தேசக்காற்று சிறப்பு பாடல் என்பன தேசத்தின் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தியது.
12006142_1035958103089369_8712785205710910064_n12006105_1035982569753589_8700848576633890553_n11260424_1035930889758757_3430368071935909343_n11069869_10204551557541338_6453044788088600933_o
சுதந்திரதாகம் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்திருந்த இனமான இயக்குனர் கௌதமன் அவர்களின் சிறப்பு பேச்சு இடம்பெற்றது அவருடைய பேச்சில் சமகாலஅரசியல் ஈழவிடுதலைக்கான போராட்டத்தின் முக்கியத்துவம் முன்வைகப்பட்டதோடு இந்த நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இளையவர்களின் படைப்புக்களை பார்த்து கண்ணிமை உடைத்ததாகவும் இவற்றை செயற்கையாக பார்கவில்லை எனவும் இயற்கையாக இதயத்தில் எழுந்த வலியாகத்தான் பார்க்கின்றேன் என தெரிவித்திருந்தார் எனவே இந்த நெருப்பு அணையாது இருக்குமானல் நிச்சயம் ஒர்நாள் வெல்வது உறுதி என்பதையும் பதிவுசெய்திருந்தார்

சுதந்திரதாகம் நிகழ்வில் அதிஸ்ரலாபச்சீட்டிழுப்பும் இடம்பெற்றது இச்சீட்டிழுப்பில் 1வது பரிசு256 2வது பரிசு564 3வது பரிசு678 மற்றும் ஆறுதல் பரிசில்கள் 622 296 400 369 608 637 361 631 463 602 ஆகிய இலக்கங்களுக்கு பரிசில்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

suthandirathakam-page-001

 

இதுவரை பரிசில்களை பெறாதவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவோடு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.