ஐ.நா முன்றலில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ உணர்வுடன் ஆரம்பமானது பேரணி September 21, 2015 News சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் நடாத்தக் கோரியும் வலியுறுத்தி இப் பேரணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது.