இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும்
போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற தமிழக
சட்டமன்ற தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் ரயில் மறியல் போராட்டம்!!
இலங்கையில் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை உலகெங்கும் வாழும் தமிழர்களிடம் நடத்த வேண்டும்
என்கிற
தமிழக சட்டமன்றத் தீர்மானங்களை இந்திய அரசு நிறைவேற்றக் கோரியும்
ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு தாக்கல் செய்ய வலியுறுத்தியும்
தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் ரயில் மறியல் போராட்டம் இன்று செப்டம்பர் 21-ந் தேதி திங்கள்கிழமையன்று நடைபெற்றது.
என்னுடைய தலைமையில் தருமபுரியிலும் பொதுச்செயலாளர் திரு. காவேரி அவர்கள் தலைமையில் பண்ருட்டியிலும் சேலத்தில் அமைப்புச் செயலாளர் திரு. காமராஜ் அவர்கள் தலைமையிலும் சென்னை மாநகரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகம் தலைமையிலும்  என
தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 60 ஆயிரம் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரை போலீசார் கைது செய்யாமல் விடுவித்துள்ளனர்.
ariyalur2 chennai2 panruti
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி