தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனசாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார்.

ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்..

அதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வான்படையினை உருவாக்கி வரலாறு படைத்த கேணல் சங்கர் அண்ணா அவர்கள் 26.09.2001 அன்று சிறீலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்து 14ம் ஆண்டு நினைவு நாட்களையும் இன்றைய நாளில் நினைவிற்கொள்கின்றோம்..

திலீபன் ஒரு ஈடு இணையற்ற மகாத்தான தியாகத்தை புரிந்தான் அவனது மரணம் ஒருமாபெரும் வரலாற்று நிகழ்வு தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி.

எனது அன்பார்ந்த மக்களே..திலீபன் யாருக்கா இறந்தான் எதற்காக இறந்தான் அவனது இறப்பின் அர்த்தம் என்ன?

அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்சியாக மக்கள் எல்லோரையும் எழுச்சி கொள்ளச்செய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது திலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்கா இறந்தான் உங்கள் மண்ணுக்காக இறந்தான் உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்கா கௌரவத்திற்காக இறந்தான் தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்கா ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான் ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.. என்றும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஈகைச்சுடன் லெப்ரினன் கேணல் திலீபன் நினைவாக தெரிவித்துள்ளார்.

பாரதம் தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது பாரதம் தான் எமது ஆயதப்போராட்டத்தை நிறுத்திவைத்தது. ஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமைகோரி போராடவேண்டும் எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்த அம்பை தொடுத்தான் திலீபன்.

அத்தோடு அகிம்சை வடிவத்தை ஆயதமாக எடுத்துக்கொண்டான் நீராகாரம் கூட அருந்தாது மரணநோன்பை திலீபன் தழுவிகொள்வதற்கு 24மணிநேரம் முன்பே இந்திய தூதர் டிக்சிற்கு முன்னறிவித்தல் கொடுத்தோம் ஆனால் எதுவும் நடைபெறவில்லை அதற்கு மாறாக திலீபனின் உண்ணாவிரதத்தை கேவலமாக கொச்சைப்படுத்தியது என்றும் தமிழீழ விடுதலை போராட்டத்தின் நீண்டகால நிகழ்வுகளை தலைவர் அவர்கள் அன்றே சொல்லியிருந்தார்.

அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற எம்மை நாம் அர்ப்பணிப்போமாக.