0YWGOQePyUoநோர்வேயில் நடைபெற்ற தியாகதீபம் திலீபன் நினைவெழுச்சிநாள் September 27, 2015 News, TCC தியாகதீபம் திலீபன், குமரப்பா புலேந்திரன் உட்ப்பட பன்னிருவேங்கைகள், கேணல் சங்கர், கேணல் ராயூ, லெப்ரின் கேணல் நாதன், கப்டன் கஜன் மற்றும் 2ஆம் லெப்ரின் மாலதி நினைவாக எழுச்சி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்காக மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் நினைவுரையை காணொளியூடாக நிகழ்தி இருந்தார்.விடுதலைப்போராட்டம் தொடர்பான சமகால அரசியல் நிலவரத்தை விளக்கியிருந்தார். 1987 ஆம் ஆண்டு இந்திய வல்லாதிக்கம் அமைதிப்படையாக தாயகத்தில் கால்பதித்தபோது தமிழ்மக்கள் இந்தியாவின் ஏமாற்று அரசியல் சூட்சுமத்துக்குள் சுருங்கிநின்றபோது விடுதலைப்புலிகள் மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என கூடி ஆராய்ந்தபோதுதான் திலீபன் அறப்போராட்டத்திற்கு தன்னை அற்பணிக்க தயாரகினான் பின்பு தான்கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று நீராகாரம் இன்றிய உண்ணாநிலைப்போராட்டத்தினோடு தன்னை உருக்கி காந்திதேசத்தின் கயமைத்தனத்தை தமிழ்மக்களுக்கும் உலகுக்கும் உணர்த்தினார். இந்தநிலைதான் இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது சர்வதேசத்தின் சதிவலையுக்குள் அகப்பட்டு ஏமாற்று அரசியலுக்குள் மயங்கிக்கிடக்கின்றோம் இதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும் உடந்தையாக இருப்பதுதான் ஆபத்தாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்க தமிழ்மக்களுக்காக ஆத்மாத்தமாக தியாகம் செய்யும் திலீபன்கள் இல்லை மாறாக மயக்க அரசியல் வாதிகளும் அடிபணிவு அரசியல் பிரமுகர்களும்தான் நிரம்பி இருக்கின்றார்கள் இந்த சூழ்நிலையில் மக்களாகிய நீங்களே நீதிக்காக போராட முன்வரவேண்டும் அதாவது திலீபனின் மக்கள் புரட்சிக்கு தயாராகவேண்டும்