தமிழீழமகளீர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினிநினைவாக நோர்வேயில் நடைபெற்ற வீரவணக்கநிகழ்வு October 24, 2015 News, TCC தமிழீழ விடுதலைபுலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு மகளிர் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு 23.10.15 வெள்ளிக்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. தமிழீழ அரசியல்துறை மகளிர் பிரிவு முன்னாள் பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமார் அவர்களின் பிரிவு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இந்நிகழ்வில் சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் மகளிர் அமைப்பு செயற்பட்டாளரில் ஒருவரான சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் தமிழினியின் திருவுருவப்படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத்தொடர்ந்து பெண்கள் விழிப்புற்று எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும், தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன் வரும் போதுதான் அது தேசிய போராட்டமாக முழுமையடையும், என்ற எம் தேசியதலைவரின் சிந்தனைக்கு அமைவாக ஒரு வீரம் மிக்க பன்முக ஆளுமை மிக்க போராளியாக தன்னை வளர்த்துக்கொண்டார் என்பதற்கு சான்றாக தமிழினி அவர்கள் 2003ஆம் ஆண்டு வழங்கி செவ்வி யை காணொளியாக கண்ணுற்றபொழுது தேசியத்தலைவரின் வளப்பில் உருவான அரசியல்போராளியின் தூரநோக்கினை தெளிவாக்காட்டியது, ஆரம்பகாலத்தில் இருந்து இறுதிக்காலம் வரை நோர்வே மகளிர் அமைப்புடன் இருந்த அவருடைய ஈடுபாடு பற்றியும் , அவருடைய அரசியல் திறமைகள் பற்றியும் நினைவுரை , கவிதைகள் மூலம் எடுத்துக்கூறப்பட்டது. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கை கீதத்துடன் நிறைவடைந்தது.