போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி புகலிடம் கோரிய பெண் ஒருவரே இவ்வாறு மோர்லான்ட்ஸ் நகரில் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சமந்தா ரட்னம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு தடவைகள் மேயர் பதவிக்கு போட்டியிட்ட போது வெற்றிகிடைக்கவில்லை எனவும், இம்முறை தேர்தலில் தாம் வெற்றியீட்டியமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.

1989ம் ஆண்டு சமந்தா குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

சமூக சேவைகளில் காட்டிய ஆர்வமே அரசியலில் பிரவேசிக்க உந்து சக்தியாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா தேர்தலில் க்ரீன் கட்சியை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தொழிற்கட்சி வேட்பாளரை தோற்கடித்து சமந்தா வெற்றியீட்டியுள்ளார்