வரலாறாய் வாழும் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன். November 1, 2015 News தமிழ்மக்களின் அரசியல்சுதந்திரத்துக்காக இருபத்துமூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல்தளத்திலும் பணிசெய்தார்பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டியசு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒருபோராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்துநான்காவது வயதில் செயல்திறன்மிக்கவிடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப்பொறுப்பாளர் என்றபொறுப்பை ஏற்றதிலிருந்து அவர்மரணிக்கும் வரையான பதினான்குஆண்டுகளாகத்தனது பணியை செவ்வனேநிறைவேற்றியுள்ளார். பிரிகேடியரைப்பொறுத்தவரையில் அவரைமிகவும் நேசித்த தேசியத்தலைவர்பிரபாகரன் அவர்களால் யதார்த்த பூர்வமான சிந்தனையையும், செயலையும் புடம் போடக்கூடிய செயலினூடாக அறிவுபூர்வமாகவளர்க்கப்பட்டார். அதனால்தான் பிரிகேடியரால் சமகாலத்தில் அரசியல்ரீதியாகவும் படைத்துறைரீ தியாகவும் செயற்படமுடிந்தது. அத்தோடு அவரது ஆற்றலானது செயல்பூர்வ அறிவாகமிளிர்ந்தது. அரசியல் ரீதியில் தமிழ்மக்களின் விடுதலைகுறித்து ஒரு எத்தனிப்பைசெய்து கொண்டு படைத்துறை ரீதியாகபலம் பெறுவதொன்றே தமிழ்மக்களின் விடுதலையை செயல்பூர்வமானதாக்கும் என்ற தேசியத்தலைவர் அவர்களின் விடுதலைச்சிந்தனையை அனைத்துலகமேடைகளில் அவரால் உறுதியுடன் முன்கொண்டுசெல்ல முடிந்தது.